தேவனுடைய வெகுமதிகள் எப்பொழுதுமே அவைகளுடைய ஸ்தானங்களைக் கண்டடைகின்றன Jeffersonville, Indiana, USA 63-1222 1சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. (சகோதரன் நெவில், “சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என் கிறார். - ஆசி.) சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மாலை வணக்கம், நண்பர்களே. சற்று முன்னர் நான் உள்ளே நுழைந்தபோது, என்னால் உங்கள் யாவருக்கும் ஒரு “மகிழ்வார்ந்த கிறிஸ்துமஸ்” வாழ்த்தினைக் கூற வரமுடிந்ததை நான் எண்ணிப் பார்த்தேன். ஆகையால் கர்த்தருடைய வார்த்தையின் பேரில் உங்களண்டை பேசும்படியான இந்த மேன்மையான சிலாக்கியம் எனக்கு உண்டாயிருக்கும் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை. எனவே சகோதரன் நெவில் என்னை பேசும்படிக் கேட்டுக் கொண்டார். நான் வழக்கமாக உபயோகித்து வருகிற பல்வேறு கிறிஸ்துமஸ் சிறு வேதபாடப் பகுதிகளைக் கைவசமாக வைத்திருந் தேன். அவைகளில் ஒன்றை டூசானில் உள்ள பீனிக்ஸிலும், அங்கு சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களிலும் ஒரு வழக்கமான கிறிஸ்துமஸ் செய்தியாக அளித்து வந்துள்ளேன். ஆனால் இன்றிரவோ, நான் கொலரோடாவில் இருந்தபோது, அண்மையில் கர்த்தர் என் சிந்தையில் அருளின ஒரு சிறிய காரியத்தின் பேரிலேயே இங்கு பேசலாம் என்றே நான் எண்ணினேன். 2கிறிஸ்துமஸ் நேரத்தில் ஏதோ ஒரு காரியத்தின் மேல் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நான் இங்கு ஐந்து அல்லது ஆறு சிறு சுருக்கமான குறிப்புகளையும், வேத வாக்கியங்களையும் குறித்து எழுதி வைத்தேன். அந்த .... எனக்குத் தெரியவில்லை ... சகோதரன் நெவில் அவர்களும் மற்றும் எல்லா ஊழியக்காரர்களுமே அதைச் செய்கின்றனர் என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் ..... ஏதோ ஒரு காரியம் உங்களுக்கு வெளிப்படுவதுபோல் தென்பட்டால் ....... அப்பொழுது நீங்கள் அதைக் குறிப்பெழுதி வைக்கிறீர்கள். நீங்கள் சற்று நேரம் காத்திருந்து, பின்னர் அதை நீங்கள் எழுதி வைக்கிறீர்கள். நான் அதை ஒரு துண்டு காகிதத்தின் மேல், வெறுமனே ஒரு துண்டு காகிதத்தின் மேல் எழுதி வைக்கிறேன். அதன் பின்னர் நான் சில நேரத்தில் அதை எடுத்துப் பார்க்கும் போது, “நான் இதில் எழுதி வைத்திருந்தது என்ன?” என்று கூறி, அதனை முழுமையாகத் திரும்பவும் உற்று நோக்குவேன். அந்த விதமாகத்தான் நாம் அதனை உண்மையாகவே துரிதமாக நினைவு படுத்திக் கொள்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். வழக்கமாகவே, நான் .... நான் வாலிபனாயிருந்தபோது, என்னுடைய சிந்தையில் முழுமையாய் .... ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது. என்னால் இதை இப்பொழுது சற்று எண்ணிப் பார்க்க முடிந்தது. அப்பொழுது நான் காத்திருக்க வேண்டியதா யிருக்கவில்லை, நான், “பத்து நாட்களுக்கு முன்னர், நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட, குறிப்பிட்ட இடத்தில் இருந்தேன். அதுதான் பாடப் பகுதி. இதோ அது உள்ளது, இதோ அது தெரிய வந்துள்ளது” என்றே நினைக்கிறேன். நான் ஒரு சில மைல் கற்களை கடந்துள்ள காரணத் தையும், சகோதரன் ஹிக்கின்பாதம் அவர்களோ ஒரு சில ஆறு களையே கடந்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதாவது இனி ஒருபோதும் அந்த வழியானது வருவதில்லை. மேலே உள்ள பாதைக்குச் சற்றுத் தூரத்தில்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது ..... சற்று முன்னர் சகோதரன் நெவில் கூறினது போன்றே, “நாங்கள் நிலையான புகலிடத்திற்கு அருகில், அருகில் சென்று கொண்டிருக்கிறோம்.” 3வீட்டிற்கு திரும்பியிருப்பது நன்றாயுள்ளது. நான் திரும்பி வந்துள்ளேன். ஏனென்றால், அளவுக்கு மீறின பனி. அங்கே .... விபத்துகளையும் மற்றுமுள்ளக் காரியங்களையும் குறித்துக் கேள்விப் படுகிறேன். அனேக ஜனங்கள் சாலையில் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான எத்தனையோபேர் இப்பொழுது தங்கள் ஜீவனை இழப்பார்கள் என்பதைக் குறித்தும், இன்றிரவிலிருந்து புதிய வருடத்திற்குள் உள்ள இடைப்பட்ட நாட்களுக்குள் எத்தனை அமெரிக்கர்கள் மரிப்பார்கள் என்பதைக் குறித்தும் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களில் சிலர் இன்றிரவு இங்கிருக்கலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே தேவனுக்கு முன்பான நம்முடைய நிலைமையை ...... பொறுத்ததாய் அது இப்பொழுது உள்ளது. இது ஒரு துக்கமான தேசமாயுள்ளது. எங்கும் துக்ககர மாகவேயுள்ளது என்று இந்த சகோதரன் கூறினார். நம்முடைய கொடியோ முப்பது நாட்களாய் அரைக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், அது எல்லாவிதமான பாவத்தின் நிமித்த மாகவும், தேவனுடைய வழியின் காரியங்களை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களின் நிமித்தமுமேயாகும். 4நாமும் கூட ஒரு நபரோடு இணங்கக்கூடாமற்போகு மானால், அப்பொழுது நம்மால் அதை இன்னும் ஒரு சகோதர முறையில் செய்ய முடியவில்லையென்றால், அப்பொழுது ...... பாருங்கள், கிறிஸ்து இருதயத்தில் இருப்பாரேயானால், அப்பொழுது நீங்கள் அந்த மனிதனோடு எவ்வளவுதான் இணங்காமலிருந்தாலும் கவலையேப்படாமல், நீங்கள் இன்னமும் அவருக்கான அன்பையும், மரியாதையையும் கொண்டிருப்பீர்கள். நான் அனேக சமயங்களில் அனேக மனிதர்களோடு இணங்குகிறதில்லை. ஆனால் அப்படி யிருந்தாலும், நான் எப்போதும் இணங்காமற்போன கருத்தினைக் கொண்ட எவரிடமாவது, “நான் என் கரத்தை அவர் மீது போட்டு, அவரை 'என் சகோதரனே' என்றழைத்து, என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவருக்கு உதவி செய்ய முயற்சிக்காமல் இருந்ததை” நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நான் நினைக்கும் காரியத்தின் பேரில் ஒருக்கால் அவரோடு கருத்து வேறுபாட்டின் பேரில் இணங்காமலிருக்கலாம் ..... அவர் எதை விசுவாசிக்கிறாரோ அதை அவரைப் போன்று நான் விசுவாசியாமலிருக்கலாம். ஆனால் .... இது போன்றவைகள், ஆனால் அவர் தன்னுடைய விருப்பத்தை என்னிடம் வெளிப்படுத்துவது போல நானும் என்னுடைய விருப்பத்தை இப்பொழுது வெளிப்படுத்த முயற்சித்து, ஒன்று சேர்ந்து அலசி ஆராய்ந்து, நாங்கள் என்ன பெற்றுள்ளோம் என்று பார்க்கலாம். ஆனால் அந்த விதமான கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். அது உண்டாகும்போது ..... நாம் கோபம் கொள்ளவோ அல்லது தீங்கிழைக்க வேண்டுமென்றோ அல்லது அழிக்கவோ அல்லது வேறெந்தக் காரியத்தையும் செய்யவோக் கூடாது. நாம் எப்பொழுதுமே ஒன்றிணைந்து உருவாக்கவே முயற்சிக்க வேண்டும். 5இங்கே மிகக்கடுமையான குளிர் நிலவியுள்ளது. நமக்கு அவ்வாறு இருக்கிறதல்லவா? நான் டூசானை விட்டு புறப்பட்ட போது எழுபத்திரண்டு பாகை. சூரியன் அஸ்தமித்து, இருண்டு விட்ட போது, அது அப்படியே அறுபத்தொன்பது பாகையாக இருந்தது. ஆகையால், இங்கே திரும்பி வரும்போது, நான் அப்படியே நடுங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ....... அந்தப் பனி நிறைந்த சாலையிலும், பூஜ்யத் திற்கு கீழான பனி மற்றும் எல்லாவற்றிலுமே நான் மீண்டும் வழக்கம்போல் செல்ல வேண்டியதாயிருந்தது. நீங்கள் இப்படிப் பட்ட ஒரு-ஒரு சிறிய வழியில் எப்படி இந்தத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பழக்கமடைந்து கொள்ள முடிகிறது என்பது மிகவும் வினோதமாக உள்ளது. நான் உங்களை விட்டுச் சென்றது முதற் கொண்டு, எனக்கு இங்கு வசிக்கும்படியான தருணமே உண்டா யிருக்கவில்லை . எனக்கு ........ இங்கிருந்த காலைநிலையில் எலும்பு உட்புழை பாதிப்பு போன்றவை இருந்தது. எனக்கு வயதாகின்ற காரணத்தால் ........ நான் இங்கேயே பிறந்து வளர்க்கப்பட்டவன். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் வாலிபமாயிருக்கும்போது, நீங்கள் ஏதோ ஒன்றை உடையவராயிருக்கிறீர்கள். எனவே உங்களால் எதையுமே பொருட்படுத்தாமலிருக்க முடியும்; ஆனால் உங்களுக்கு வயதாகும் போது , ஏன், நீங்கள் அங்கே ஏதோக்காரியம் இல்லாம லிருப்பதைக் கண்டறியத் துவங்குகிறீர்கள். வழக்கமாக முன் பெல்லாம் உங்களால் அதைக் குறித்தே மறந்துவிட முடிந்தது. நீங்கள் ........ நீங்கள் ஒரு பிள்ளையாயிருந்தபோது அதைப் பொருட் படுத்தாமலிருந்ததைப் போன்றிருக்க முடியாத ஏதோக்காரியம் அங்கே உள்ளது. எனவே அந்த வழியில் நான் ......... கண்டறிவது ...... ஒரு வயோதிக மனிதனுக்கான அந்தக் கதகதப்பான சீதோஷ்ண நிலையேயாகும். அது ஒரு விதத்தில் சற்று உதவுகிறது. 6நான் ஒரு சிறு பிள்ளையாய் (ஏழு, எட்டு, பத்து, பன்னிரெண்டு , பதினான்கு வயதில்) காலணிகளேயின்றி (வரிப் பந்தாட்டக் காலணிகள் - Tennis Ball) எட்டு அல்லது பூஜ்ஜியத்திற்கு கீழே பத்து பாகை இருந்தபோது, காலணி கிழிந்து போய் கால் விரல் வெளியே தெரியும். அந்தக் கிழிந்துபோன வரிப்பந்தாட்டக் காலணிகளோடு அங்குள்ள அந்த ஊடிகா பைக் என்ற இடத்திற்கு வருவதை நினைத்துப் பார்க்கிறேன். இல்லை ........ இப்பொழுது பனி உறைவதால் இங்குள்ள தெருவில் அந்தவிதமாக நடக்கவே மாட்டோம். அப்பொழுது மோட்டார் வாகனங்களின் போக்குவரத்தும் கிடையாது எப்பொழுதாவது ஒருமுறை பெரிய சாமான்களை ஏற்றிச்செல்லும் வண்டி வரலாம். அப்பொழுது காலையில் அந்த நெடுஞ்சாலையில் சிறிய பழைய கோட்டை, உள் சட்டையே இல்லாமல் அணிந்துகொண்டு, இந்தவிதமாக ஊசியினால் குத்தி இணைத்துக் கொண்டு, இப்பொழுது வைக்கப்பட்டுள்ள ஒன்றுமே அப்பொழுதில்லாதபடியால், என்னுடைய முழங்கால்கள் ஈரமாக நனைந்து ஊறுமளவிற்குத் தொடர்ந்து சென்று, அதனைப் பொருட் படுத்தாமலிருப்பதுண்டு. பாருங்கள் அவ்வளவு கடுங்குளிர் இல்லாமலிருந்தது. ஆனால் அது சுமார் நாற்பத்தைந்து ஆண்டு களுக்கு முன்னர் அவ்வாறிருந்தது. ஆகையால், அநேகக் காரியங்களை மிக வேகமாகச் செய்த நாம், பெலவீன மிகுதியினால் நாம் வழக்கமாக செய்துவந்தவைகளை இப்பொழுது நாம் செய்ய எடுத்துக் கொள்கிறதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சகோதரன் காப்ஸ் தன்னுடைய தலையை மேலே உயர்த்துவதை நான் கண்டேன். நீர் அந்த நினைவுகளை இப்பொழுது சிந்தித்துப் பார்க்க மிகவும் இளைஞராக இருக்கிறீர். ஆகையால் சகோதரன் நெவில் அவர்களும், நானும் உள்ள இந்த நிலைமைக்கு நீர் வரும் மட்டும் காத்திரும். அப்பொழுது - அப்பொழுது நீர்-நீர் வித்தியாசமான ஏராளமான காரியங்களையும், ஒருவிதமாக தளர்வுறுகிறதையுங் குறித்து எண்ணிப் பார்ப்பீர். 7நல்லது, நாங்கள் கர்த்தருக்குள் மகத்தான நேரங்களைக் கொண்டிருந்தவர்களாய் இருந்து வந்துள்ளோம். கர்த்தர் எங்களை மிகப்பெரிய அளவில் ஆசீர்வதித்திருக்கிறார். நான் அதற்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் திரும்பி வருவேன். அடுத்த ஞாயிறு என்று நான் நினைக்கிறேன், கர்த்தருக்குச் சித்தமானால், சகோதரன் நெவில் பொருட்படுத்தாமலிருந்தால் ....... நான் ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவு, ஞாயிறு இரவுக்கான ஒரு சுகமளிக் கும் ஆராதனையை வைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஞாயிறு காலைக்கு நான் ஒரு முக்கியமான செய்தியை வைத் துள்ளேன். கர்த்தருக்குச் சித்தமானால் நான் அதை அளிப்பேன். நான் என்னுடைய வேத பாடப்பகுதியைக் குறித்து ....... இதுவரை என்னுடைய வேத பாடப்பகுதியைக் குறித்தோ, அதற்கான எந்த சந்தர்ப்பத்தைக் குறித்தோ சிந்திக்கவேயில்லை. ஏனென்றால் நான்-நான் ........ உங்களுக்குத் தெரியும், கர்த்தரிடத்திலிருந்து எந்த வெளிப்பாடுமில்லாமல், ஒன்றுமேயில்லாமல் ...... ஆனால் வெறுமனே எனக்குள்ளாக நினைத்து வைத்திருக்கிறேன். ஞாயிறு அன்று நான் - நான் வெளிப்படுத்திக்கூற விரும்புகிற ஒரு காரியமானது இந்த வழிகளுக்கு ஒரு விதத்தில் சற்று உதவியா யிருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் இப்பொழுது ஊழியக் களத்திற்குள்ளாகச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. நான் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய எங்கும் தொடர்ந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். பில்லி என்னிடத்தில் பிரயாணக் குறிப்புகளைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தான். அதாவது நான் இங்கிருந்து சென்ற பிறகு ஏப்ரல் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிற்குச் சென்று, பிறகு டூசானுக்குத் திரும்பிப் போகிறேன். அதனோடு அப்பொழுது அது முடிவடைகிறது. பின்னர் அடுத்த நவம்பர் மாதம், அக்டோபர் மாதம் வரையில் நான் கடல் கடந்து செல்லும் ஊழியத்திலிருந்து இந்தப் பக்கத்திற்குத் திரும்பி வருகிறேன். 8இப்பொழுது, கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இன்னும் ஒரு நாள், அப்படித்தானே? அதற்கு இரண்டு நாட்கள் உள்ளன. திங்கட்கிழமை ........ செவ்வாய்கிழமை கிறிஸ்துமஸ் தின முந்தின மாலை. செவ்வாய்கிழமை கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின மாலையாகும். உட்புறத்தில் அணுகப்பட வேண்டிய முறையில் நாம் இந்த மகத்தான விடுமுறை நாளை அணுகிக்கொண்டிருப்பதை காண்பதென்பது பயபக்தியையுண்டாக்கு கிறதல்லவா? முயல்கள் மற்றும் “கிரிஸ்கிரிங்கிள்'' என்றழைக்கப் படுகின்ற ஒரு கட்டுக்கதை, இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத்தெய்வம் (Santa Claus) மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமும் நினைத்துப் பார்ப்பதற்கு அப்பேற்பட்ட ஒரு கண்மூடித் தனமான காரியமாயும், அப்படிப்பட்ட ஓர் ஏளனத்திற்குரிய காரியமாய் இருக்கிறது. அது கிறிஸ்துமஸ் என்ன என்பதன் உண்மையான மதிப்பையே எடுத்துப் போட்டுள்ளது. இப்பொழுது, நாம் ...... தெரியாது ...... நாம் - நாம் அறியோம். நான் நிச்சயமாக நம்பவில்லை ...... நான் சற்று முன்னர் வந்து கொண்டிருக்கையில், என்னுடைய மனைவியோ அங்கே பின்னாக அமர்ந்திருக்க, நான் ........ வீதியில் வந்து கொண்டிருக்கும் போது, வான சாஸ்திரியைக் குறித்து ஒலிபரப்பப்பட்டதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதாவது இப்பொழுது அனேக ஆண்டுகளுக்கு முன்னர், நான் இங்கே இந்தியானாவில் வனவிலங்கு வேட்டை அதிகாரி யாக இருந்தபோது, வான சாஸ்திரியைக் குறித்து அவர்கள் கொண்டிருந்தக் கருத்தினை என்னிடம் கூறினர். அவர்கள் அதை என்னிடம் கூறினபோது ...... அதாவது எப்படி அந்த நட்சத்திரங்கள் ஒன்று கூடின என்றும், அது உருவானதை முதலாம் வான சாஸ்திரி கண்டதுபோல, அவர்கள் கூறினதென்னவென்றால், அது ஒவ்வொரு முறையும் நிகழுகிற ஓர் இயற்கையானக் காரியமாயிருக்குமாம். எண்ணூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு காரியத்தையே இன்றிரவு அவர் கூறினார் என்று நான் நம்புகிறேன். அது தாமே மீண்டும் உருவாகிறது; சார்கஸும், ஜுபிடரும் ....... அதைக் குறித்து நான் மறந்துவிட்டேன். செவ் ........ செவ்வாய் (Mars) ; இல்லை , நான் .... அது தவறாயுள்ளது. அந்த நட்சத்திரங்களில் சில, அவைகள் பூமியின் வரிசையில் தங்களுடைய சுற்றிவரும் பாதையைக் கடக்கும்போது, எவ்வளவோ வேகமாக கடக்கின்றன. இந்த வான சாஸ்திரியோ அது உண்மையாகவே ஓர் இயற்கையான காரியமா யிருந்தது என்றே இன்றிரவு கூற முயற்சித்துக் கொண்டிருந்தார். நான் - நான் - நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. அது ஓர் இயற்கைக்கு மேம்பட்ட காரியமாயிருக்கிறது. காயமாயிருக்கிறது. அவர் இயற்கைக்கு மேம்பட்டவராயிருக்கிறார். 9நான் நோக்கிப் பார்த்தபோது, இது ஏப்ரல் மாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிகிறேன், நான் ...... அதுவரை ஜீவிப்பது கர்த்தருக்குச் சித்தமானால், அப்பொழுது நான் ஐம்பத்தைந்து வயதுடையவனாய் இருப்பேன். புரிகின்றதா? எனக்குத் - எனக்குத் தெரியும் .......... ஆனால் என்னுடைய வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து, அது எங்கே சம்பவித்தது என்று நான் வியப்புறுகிறேன். எங்கள் முதல் கிறிஸ்துமஸ் முதற் கொண்டே, எங்கள் காலுறைகளைத் தொங்கவிடும்போது தாயார் வந்து..... நாங்கள் அனேகமாக ஆரஞ்சு மற்றும் இரண்டு அல்லது மூன்று மேலுறைகளற்ற மிட்டாய்களை வாங்குவோம். அதுவே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய கிறிஸ்துமஸாக இருந்தது. ஆனால் சிறுவர்கள், நீங்கள் அவர்களை அறிவீர்கள் - அவர்களோ தங்களுடைய வெகுமதிகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். நாம் - கிறிஸ்துமஸ் முக்கியமாக சிறு பிள்ளைகளுக்குரியதாயுள்ளது என்பதை ...... நாம் கண்டறிந்துள்ளோம். அவர்கள் - அவர்கள் அதை இந்நாட்களில் எதிர்நோக்கியிருக்கின்றனர். அது இப்பொழுது பிள்ளைகளுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை யாகவே பெரியவர்களுக்கானதாயிருக்க வேண்டியுள்ளது; அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உண்மையான கிறிஸ்துமஸ் என்ன என்பதைப் போதிக்க வேண்டும். 10கிறிஸ்துவானவர் யூதேயாவில் டிசம்பர் மாதம் இருபத் தைந்தாம் தேதி பிறந்திருக்கக்கூடும் என்பதை நான் முற்றிலும் நம்புவதில்லை. ஏனென்றால் அது இங்கே இப்பொழுதுள்ளதைப் பார்க்கிலும் அதிகக் குளிராயிருக்கும். புரிகின்றதா? ஓ, எப்படி மேய்ப்பர்களால் தங்களுடைய மந்தையை இரவிலே காத்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்? எனவே அப்பொழுது குடிமதிப்பு மற்றும் ஒவ்வொரு காரியமும் இருந்தது. மரியாள், சரியாகக் கூறினால் குடிமதிப்பிற்காக எருசலேமுக்கு, யூதேயாவிலுள்ள பெத்லகேமுக்கு அவ்வளவு தூரம் வரவேண்டியதாயிற்று. என்னால் - என்னால் - என்னால் - அதை நம்பமுடியவில்லை. அவள் நாசரேத்திற்கு வந்தாள் என்று நான் நினைக்கிறேன், எனவே ...... எப்படி இந்த நேரத்தில் நிகழ்ந்திருக்க முடியும். அது நிகழ்ந்திருக்க முடியாது, ஆனால் கிறிஸ்து ஒரு வசந்த காலத்தில் பிறந்தார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு விதத்திலும் அவர் ஓர் ஆட்டுக்குட்டியாயிருந்தார், புரிகின்றதா? கவனியுங்கள், அவர் ஒரு வீட்டில் அல்ல, ஒரு தொழுவத்தில் பிறந்தார். நாம் அறிந்தமட்டில், அவர்கள் அவரை சிலுவையண் டைக்குக் கொண்டு சென்றபோது (மற்றவர்கள்), அவர்கள் அவரை வழி நடத்துவதைக் குறித்து அவர் ஒன்றுமே கூறவில்லை . ஆனாலும் அவர்கள் அவரை வழிநடத்தினர். ஓர் ஆட்டுக்குட்டி யோ அல்லது ஒரு செம்மறி ஆடோ வெட்டப்படுவதற்கு வழிநடத்தப் பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது - அதுவாகவே வெட்டப்படுவதற்கு செல்லாது. நீங்கள் -நீங்கள் அதை அங்கே வழிநடத்த வேண்டும். வழக்கமாகவே ஒரு வெள்ளாடுதான் செம்மறியாட்டை வழிநடத்துகிறதாயிருக்கிறது. ஆடுகளைக் கொல்லும் பட்டியில் அவர்கள் ஒரு வெள்ளாட்டை வைத்திருக் கின்றனர். வெள்ளாடு இந்தப் பாதையில் நடந்து செல்லும். செம்மறியாடு வெட்டப்படுவதற்கு செல்லும் பாதையில் நடந்து செல்ல துவங்கும்வரை வெள்ளாடு கூடவே சென்று, அதன் பின்னர் குதித்து ஓடிவிடும். ஆனால் அவர்கள் அந்த வெள்ளாட்டை கொல்லப் போகும் நேரம் வரும்போது, அது உண்மையாகவே உதைத்துத் தள்ளி ஒரு பரபரப்பை உண்டாக்கி விடுகிறது. (அது உள்ளே ஓடிவிட வேண்டியதாயுள்ளது) ஏனென்றால் உங்களால் அதனை குற்றப்படுத்த முடியாது. ஆனால்-ஆனால் இதுவோ ஓரு செம்மறியாடு எப்படி நடத்தப்பட வேண்டியதாயுள்ளது என்ற ஒரு காரியமாயுள்ளது. அவர் கொல்லப்படுவதற்கு வழிநடத்தப் பட்டார். அவர்கள் அவரை வழிநடத்தினர். அவர் ஓர் ஆட்டுக் குட்டியாயிருந்தார். அந்த விதமான சுபாவங்கொண்டவராயிருந்தார் என்று நான் நம்புகிறேன். ஆட்டுக்குட்டிகள் மார்ச் மாதத்தில், ஏப்ரல் மாதத்தில் பிறக்கின்றன, எங்கிருந்தாலும் அந்த மாதத்தில் தானேயன்றி, மே மாதத்திற்குப் பின்னர் பிறப்பதில்லை. அது மார்ச் மாதத்திற்கு முன்னரும், மே மாதத்திற்கு பின்னரும் பிறப்பதில்லை என்றே நான் நம்புகிறேன். - 11ஆனால் சபையானது, கிறிஸ்தவ மார்க்கமானது, நிசாயா ஆலோசனை சங்கத்தில் ரோமன் கத்தோலிக்க சமயக் கோட் பாட்டினை விவாகம் செய்துகொண்டபோது, அவர்கள் ஏற்றுக் கொண்டபோது ......... ரோம தேசமானது கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபோது, கிறிஸ்தவ மார்க்கமானது உலகளாவிய மார்க்கமாக அவர்களால் அழைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் அதை உலகளாவிய மார்க்கமாக ஏற்படுத்தினர். அவர்கள் விக்கிரகங்களை வழிபட்டனர். அவர்கள் ஒரு சூரிய தேவனைக் கொண்டிருந்தனர். சூரியனானது கடந்து சென்று கொண்டிருக்கையில், அது ஏறக்குறைய இப்பொழுது இருபத்தியொன்றிலிருந்து இருபத்தைந்து வரையில் அதனுடைய ஒரே பாதையில் நிற்கிறது. நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்கள்? .... ஒரு .... அது எனக்குத் தெரியும் என்று நான் எண்ணினேன். ஆனால் அதை நினைவிற்குக் கொண்டுவர இயலவில்லை . சூரியனானது ....... டிசம்பர் இருபத்தியொன்றிற்கும் இருபத்தைந்திற்மிடையே நீண்ட பொழுது பிரகாசிப்பதிலிருந்து குறைந்தபொழுதே பிரகாசிக்கிறது. ஓ, அவர்கள் அதை என்னவென்று அழைக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிட்டேன். என்ன? [சபையில் யாரோ ஒருவர், ''கிரகணமா?“ என்கிறார்.- ஆசி.) இல்லை , அது கடக்கையில் கிரகணம் உண்டாகிறது, சூரியனும் சந்திரனும் சேர்ந்து கடக்கிறது. அங்கு ஏதோ காரியம் உள்ளது. ஓ, என்னால் என்னால் - என்னால் அதைக் கிட்டத்தட்டக் கூறமுடியும். ஆனால் இப்பொழுதோ கூறமுடியவில்லை . ஆயினும் அது ரோமானியர்களால் சூரியனின் அசையாநிலை என்றழைக்கப்படுகிறது. (அப்பொழுதுதான் அந்த வேடிக்கைக்கான வட்டரங்கு விளையாட்டுக் காட்சிகள் (Circus) நடைபெற்றன). அது சூரிய தேவனுடைய பிறந்த நாள் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் அதை டிசம்பர் இருபத்தியொன் றிலிருந்து இருபத்தைந்து வரையிலும் கொண்டாடினர். 12ஆகையால் அதன்பின்னர் இது மாற்றப்பட்டு, ரோமாபுரிக் குள்ளாக .... ரோமாபுரியில் அவர்களுடைய வழியில் கிறிஸ்தவ மார்க்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவர்கள், “நாம் அதே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி, தேவகுமாரனுடைய பிறந்த நாளை உருவாக்கிவிடலாம்” என்றனர். புரிகின்றதா? சூரிய தேவன், ஜுபிடருடைய பிறந்தநாள், அதன் பின்னர் டிசம்பர் இருபத்தைந்து தேவகுமாரனுடைய பிறந்தநாள், அதாவது ........ ஆனால் அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது ? பாருங்கள், இன்றைக்கு நாம் ...... அது ....... அவர்கள் அதை ஜூலை அல்லது ஆகஸ்டு அல்லது அதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யப்போவதாயிருந்தால், அது, “தேவன் நமக்கு அளித்துள்ள நம்பிக்கையை நாம் நமக்குள்ளே கொண்டிருக் கிறோம்” என்ற அந்தப் புனிதத்தன்மையின் நினைவுகூருதலாய் இன்னமும் உள்ளது. இப்பொழுதோ, நீங்கள், 'நல்லது, மற்றவர்கள் எல்லோரும் இரவோடு இரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வம் (Santa Claus) என்பவற்றைக் கூறி நடத்திக்கொண்டு, அவர்கள் செய்கிற விதமாகவே செய்கிறார்களே; ஏன்? நாமும் அதை அப்படியே செய்யலாமே“ என்று கூறலாம். இல்லை, ஐயா! இல்லை, இது நமக்கு ஓர் அஞ்ஞான கொண்டாட்டம் அல்ல, இது ஒரு புனிதமான வேளையாயிருக்கிறது. கிறிஸ்துமஸ் இல்லா திருந்தால், உயிர்த்தெழுதலும் இல்லாமல் இருந்திருக்கும். கிறிஸ்துமஸ் இல்லாதிருந்தால்; அன்பே இருந்திருக்காது, சமாதானமே இருந்திருக் காது, கிறிஸ்துமஸ் இல்லாமலிருந்தால், இதற்குப் பின்பு விசுவாசிக் கானது ஒன்றுமே இருந்திருக்காது. 13இப்பொழுது, நீங்கள், “நல்லது, உலகத்தில் மற்றவர்கள், அவர்கள் வெறுமனே...” என்று கூறலாம். நல்லது, பாருங்கள், இருண்ட மேக மூட்டமான ஆகாயத்தில் வளைந்து, வளைந்து கவர்விட்டுச் செல்லும் மின்னலானது இருண்ட நேரத்தில் வெளிச்சம் இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. எப்பொழுது ஒளியானது தன்னுடைய மிகச்சிறந்த ஒளியை பிரகாசிக்கிறது? இருளில் பிரகாசிக்கும் இந்த விளக்குகளை நீங்கள் பகல் நேரத்தில் எரியச் செய்யும்போது, சூரிய வெளிச்சம் உள்ளே பிரகாசித்துக் கொண்டிருந்தால், உங்களால் அவைகள் எரிவதை கவனிக்க இயலாது. ஆனால் வெறுமனே ஒரு சிறு விளக்கை நாம் அந்தகார நேரத்தில் உண்மையாகவே பிரகாசமாக ஒளிரச் செய்யலாம். இப்பொழுது உள்ள அந்தகாரத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்குள்ளிருக்கிற நம்பிக்கையைக் குறித்து, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சிக் கூற வேண்டுமேயன்றி, ஏதோ முன்னர் பிறந்த கிரிஸ் கிரிங்கிள் என்பவரைப் பற்றியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒருவிதமான ஒரு மரம் பற்றவைக்கப்பட்டு, ஓர் இரவு காட்டினூடாக எரிந்தது என்று ஆதாரமேயில்லாத ஏதோ ஒரு கட்டுக்கதையைப்பற்றியல்ல. ஆனால் மேசியாவின் வருகையைக் குறித்து வாக்களிக்கப்பட்டுள்ளத் தேவனுடைய வார்த்தையின் பேரில் நாம் உறுதியாக விசுவாசங்கொண்டுள்ளோம். இரண்டா... கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் நாளியே அவர் பிறந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோம். 14எனவே இன்றிரவு நாம் சற்று வித்தியாசமான வழியில் பேசப்போகிறோம். உங்களுடைய போதகர் ஏற்கனவே பேசியிருக்கிறார் என்றும், அநேகமாக புதன்கிழமை இரவு மீண்டும் பேசுவார் என்றும் நான் யூகிக்கிறேன். ஏனென்றால், அவர் ஏதோ ஒரு வேத பாடப்பகுதியை அல்லது ஏதோ ஒன்றை எனக்கு இன்றிரவு இந்த மேடையில் அளிக்கும்படி பின்னால் வைத்திருந்தார் என்பதை நான்- நான் அறிவேன். அவர் அதை எடுத்துக்கூறும்படிக்கே நான் விரும்புகிறேன். நான் அவர் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். ஆனால், இப்பொழுது நாம் இதைச் செய்வதற்கு சற்று முன்னர், நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் ஜெபத்திற்காக அப்படியே வணங்குவோமாக. பரலோகப்பிதாவே, இந்த மகத்தான புனிதமான நேரத்தில், இங்கே வேதத்தில் பல்வேறுபட்ட காரியங்களைக் குறித்து நாங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அது நாங்கள் பழைய ஏற்பாட்டில் எங்கு சென்றாலும், தேவன் தம்முடைய குமாரனை அனுப்பும்போது என்ற அந்த நாளைக் குறித்தேப் பேசுகிறது. எப்படியாய் அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களண்டைத் தேவனுடைய வார்த்தையின் தீர்க்கதரிசனம் வருவதற்காகத் தங்களுடைய நேரத்தை அங்கே ஒதுக்கியிருந்தனர். அவர்கள் தங்களுடைய நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்து, நிறைவேறப்போகும் காரியங்களை முன்னறிவித்தனர். தேவன் இவ்வளவாய் உலத்தில் அன்புகூர்ந்து தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளினபோது, அந்த இரவு பெத்லகேமில் இவையாவும் அங்கே நிறைவேறினதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுதும் கர்த்தாவே இன்றிரவு நாங்கள் இங்கே உம்முடைய வார்த்தையின் பேரில் பேசும்படியாகவே அமர்ந்துள் ளோம். அது அவ்வளவு புனிதமானதாயுள்ளது. கர்த்தாவே, அந்தக் காரணத்தினால், நாங்கள் முதலில் உம்மண்டைப் பேச விரும்பு கிறோம். நீர் உம்முடைய வார்த்தைக்கென எங்களுடைய மனதை திறந்தருள வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 15இப்பொழுது நான் இங்கு சில வேத வாக்கியங்களை ஒரு வழக்கமான கிறிஸ்துமஸ் கதைக்காக மத்தேயு 2-ம் அதிகாரத் தில் கண்டறிந்துள்ள வேத வாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் அதனண்டைக்குத் திருப்பிக் கொண்டிருக்கும் போது யோவான் 3:16 அன்றொரு இரவு பீனிக்ஸில் ...... ஒலிநாடாவை கேட்கிற ஜனங்களாகிய நீங்கள் இங்கு இருப்பீர்களாயின், ஒலி நாடாக்களை கேட்பவர்கள், நீங்கள், 'ஏன் இயேசுவானவர் பெத்லகேமிற்கு வர வேண்டியதாயிருந்தது?' என்ற அந்த ஒரு செய்தியை நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏன் அவர் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. பெலிஸ்தரின் சேனை பாளைய மிறங்கியிருந்ததைக் கண்டு, மலையின் மேல் காத்திருந்து, படுத்துக்கொண்டே கீழே நோக்கிப் பார்த்த தாவீதைக் குறித்ததான அவை யாவுமே அடையாளங்களாய் இருந்தன. நான் அது அந்த பெத்லகேமில் ...... எதைப் பொருட்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து ...... சரியாக இன்றைக்கு அதனோடு ஒப்பிட்டேன். கிறிஸ்துவே நம்முடைய பெத்லகேமாயிருக்கிறார். தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் பெத்லகேமில் பிறந்திருக்கிறான் என்று நிரூபிக்க முடிந்தது. ஏனென்றால் கிறிஸ்துவே பெத்லகேமாய் இருக்கிறார். அந்தக் காரணத்தினால் அவர் ஜீவ அப்பமாயிருந்தார். பெத், பெ-த் என்பதன் பொருள் - பொருள் “வீடு” என்பதாயும், ஏ-ல் என்பது “தேவனாயும்'', ல-கே-ம், லகேம் என்பதன் பொருள் ''அப்பம்'' என்பதாயுமுள்ளபடியால், அது ”தேவனுடைய அப்பத்தின் வீடு“ என்பதாகும். இயேசு கிறிஸ்து ”தேவனுடைய அப்பத்தின் வீடாய், நித்திய ஜீவ அப்பமாயிருந்தார். கிறிஸ்துவுக்குள்ளாகப் பிறந் திருக்கிற ஒவ்வொரு மனிதனும், நீங்கள் பெத்லகேமிற்குள், “தேவனுடைய அப்பத்தின் வீட்டிற்குள்'' பிறந்திருக்கிறீர்கள். எப்படியாய் இன்றைக்கு இந்தச் சபைகளின் சங்கங்கள் பெலிஸ்தியர் களைப்போல் ஜனங்களை இதிலிருந்து விலக்கி வைக்கும்படிக்கு தாணையமிறங்கியிருக்கின்றன. 16எப்படியாய் அந்தத் தீரமான மனிதர்கள் தாவீது அபிஷேகிக்கப்பட்டிருந்தான் என்றும், அப்பொழுது கொஞ்சமும் புகழற்றிருந்தாலும் ..... என்றோ ஒரு நாள் இராஜாவாகப் போகிறான் என்றும் அறிந்திருந்தனர். ஏனென்றால் அவன் தன்னுடைய ஜனங்களுக்கு மத்தியில் பகைமையிலிருந்து தப்பியோடி, அலைந்து திரிகிற ஒருவனாயிருந்தான். ஆனாலும் ஒரு நாளில் அவனுடைய அழைப்புத் தெரியவரும் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் அவனோடிருந்தத் தீரமான மனிதர்களாயிருந்தனர். அந்த மனிதர்கள் புறஜாதியாராயிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெரும்பாலும் புறஜாதிகளாயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது இன்றைய மிக அழகான ஒரு மாதிரியா யிருக்கிறது. ஒரு மனிதன் அவ்வளவு தீரமுள்ளவனாயிருந்தான். அவன்தானே ......... தன்னுடைய ஈட்டியினால் ஒரே நாளில் எண்ணூறு பேர்களைக் கொன்று போட்டான். மற்றொருவன் தானிய வயலில் நின்று கொண்டிருந்தபோது ஒரு கூட்ட இராணுவ சேனை எதிர்கொண்டு வந்தது. அவர்கள் யாவரும் ஓடிவர, அவனோ அங்கே நின்று தன்னுடையப் புயங்கள் களைத்துப்போகுமட்டாய் மனிதரைக் கொன்றான். அதன் பின்னர் மற்றொருவன் எப்படியாய் ஒரு கெபிக்குள்ளாகக் குதித்து உறைந்த மழை நாளில் தனியாக ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டான். ஒரு பெலிஸ்திய ...... ஓர் எகிப்தியன் இவனை ஒரு நீண்ட ஈட்டியோடு எதிர்த்துவர, இவன் ஒரு தடியை எடுத்து இந்த ஈட்டியை அவனுடையக் கையிலிருந்து தட்டிவிட்டு, பறித்து, அந்த ஈட்டியையே எடுத்து அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டு, பின்னர் முந்நூறு சேனைத் தலைவர்களையும் கொன்று போட்டுவிட்டான். 17மகத்தான மனிதர்களைத் தாருமே! தாவீதோ, “நான் இன்னும் ஒரு விசை அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருகக் கூடுமானால் நலமாயிருக்குமே!” என்று கதறுவதைப் பாருங்கள். (அவன் காலையில் தொழுவத்திலிருந்து தன்னுடைய ஆடுகளை ஒட்டிச் செல்லும்போது, அவைகள் தண்ணீர் பருக வாஞ்சிக்கும், அப்பொழுது வழக்கமாக அவன் அங்கே அவைகளுக்கு தண்ணீர் காட்டுவான்.) இந்த மனிதர்களோ தங்களது பட்டயங்களை உருவி பதினைந்து மைல் தூரத்திற்குச் சண்டையிட்டுச் சென்று, இந்தத் தண்ணீரைத் திரும்பக் கொண்டு வந்தனர். தாவீதோ, “நான் இதைப் பருகுவது தூரமாயிருப்பதாக” என்றான். எனவே, அவன் கர்த்தருக்கென்று ஒரு பானபலியாக தரையிலே ஊற்றிப்போட்டான். இன்றிரவு இந்த யோவான் 3:16 வசனத்தினைக் குறித்ததும், அதே காரியத்திற்கு என்ன ஓர் அழகான மாதிரியாயுள்ளது. தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை ...... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். கிறிஸ்து என்ன செய்தார்? நித்தியமாக ஜீவிப்பதற்கு அவர் கொண்டிருந்த ஜீவனை, அவர் தம்முடைய இரத்தக் குழாய் களிலிருந்து, அவருடைய ஜென்ம சுபாவ ஜீவியத்திலிருந்து தரையிலே அதை ஊற்றினார். நமக்காக ஒரு குற்ற நிவாரண பலியாகவே நிலத்தின் மேல் ஊற்றினார். எப்படியாய் இன்றைக்கு புறஜாதியார் கனமுள்ள மனிதர், மனிதர், மகத்தான மனிதர் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, அங்கே நின்று, கிறிஸ்துவுக்காக (நம்முடைய தாவீது) மாசற்ற குடிதண்ணீரைப் பெறத் தங்களுடைய வழியினூடாக வெட்டிக் கொண்டே செல்கின்றனர். இன்றைக்கு அது பொது மக்களால் விரும்பப்படாததாய் உள்ளது. ஆனால் நம்முடைய தாவீதோ, அவர் வல்லமையோடு வரப்போகிறதையும், அப்பொழுது அவர் ஒவ்வொரு தேசத்தையும், தன்னுடைய பாதத்தின் கீழே இந்தவிதமாய் மிதித்து, இருப்புக்கோலால் அவை களை அரசாளப் போகிறார் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். உண்மையான தீரமுள்ள மனிதர் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நின்று, பயமின்றி பக்கவாட்டிலிருந்து பக்கவாட்டிற்கு வெட்டிக் கொண்டேயிருக்கின்றனர். ஏனென்றால், அவர் வல்லமை யோடு வரப்போகிறார் என்பதை நாம் அறிந்துள்ளோம். 18யோவான் 3:16 க்குப் பிறகு, இப்பொழுது நாம் வாசிப்போ மாக. நாம் சாஸ்திரிகளின் வருகையைக் குறித்து பரிசுத்த மத்தேயு 2ம் அதிகாரத்தை வாசிப்போமாக. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்ட பொழுது, அவனும் அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லா ரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 19அதாவது தேவன் எப்படியாய் இங்கு மிக வினோதமான, மேம்பட்ட நிலைக்கு சற்று கீழான அடுத்த நிலையான ஒரு வழியில் ... தேவன் சொப்பனங்களினூடாக ஜனங்களண்டைப் பேசுகிறார். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆனால் எப்படியாய் தேவன் இந்தச் சம்பவத்தில் இரண்டாந்தரமான ஒன்றை உபயோகப் படுத்தினார். இப்பொழுது, ஒரு சொப்பனம் ......... ஒரு சொப்பனம், அது சரியாக வியாக்கியானிக்கப்படுமாயின், அது ஒரு தரிசனத்தைப் போன்ற ஒன்றாகும். ஒரு சொப்பனம் வியாக்கி யானிக்கப்படுகிறதாயிருக்குமாயின் நலமாயிருக்கும். தேவன் அதை பழைய ஏற்பாட்டில் பூர்வகால முதற்கொண்டும், காலங்களினூடா கவும் வழக்கமாகவே செய்து வந்துள்ளார். மீண்டும் அதைக் கடைசி நாட்களில் செய்வதாக வாக்களித்துள்ளார். இப்பொழுது, ஜனங்கள் அளவுக்கு மிஞ்சி உண்டு களித்துவிட்டு, கொடிய கனவுகளைக் காணக்கூடும். அதுவல்ல - அவை உண்மையான ஆவிக்குரிய சொப்பனங்கள் அல்ல. நீங்கள் அதை வாசிக்கும் போது, அது உங்களுக்கு சரியாகப் பொருள்படுகிறதில்லை. அவைகளில் சில சரியாயிருப்பதுபோலத் தென்படலாம். ஆனால் அதே சமயத்தில் உண்மையான, ஆவிக்குரிய சொப்பனங்கள் உண்டு. இங்கே கூடாரத்திலே தேவன் ஜனங்களுக்கு சொப்பனங் களைக் கொடுக்க, அவைகள் வியாக்கியானிக்கப்பட்டு, அவைகள் நிறைவேறுகிறதையும், அவைகள் உண்மையாய் இருப்பதையும் நாம் அறிந்துள்ளோம். ஆனால் இதைச் செய்யும் முறையோ ஓர் இரண்டாந்தரமான முறையாய் உள்ளது. புரிகின்றதா? 20இப்பொழுது, அப்பொழுது அது செய்யப்பட்டதன் காரணம், அந்த நேரத்தில் சொப்பனத்தை வியாக்கியானிக்க தேசத்தில் தீர்க்கதரிசியே இல்லாமலிருந்ததே அதற்கு காரணமா யிருந்தது. புரிகின்றதா? சொப்பனங்களை வியாக்கியானிக்க யோசேப்பு, தானியேல் மற்றும் அந்தப் பண்டையத் தீர்க்கதரிசி களைப் போன்றே தீர்க்கதரிசியே இல்லாமலிருந்தனர். அவர் களுக்கு நானூறு ஆண்டுகாலமாகத் தீர்க்கதரிசியே இல்லாம லிருந்தபடியால், தேவன் தம்முடைய சொந்தப் பிள்ளையின் நலனுக்காக ....... சொப்பனத்தை உபயோகித்தார். அவரே செய்தார். யோசேப்பு, “ஒரு நீதிமானாயிருந்து, அவளை அவமானப் படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தபோது, அவர் அவனிடத்தில் கூறினார். அவள் அவனிடத்தில் காபிரியேலின் வருகை முதலியனவற்றையும், அவன் என்ன கூறியிருந்தான் என்பதையும் கூறியிருந்தாள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அவனோ அவள் தாயாகப் போவதைக் கண்ட போது, அது - அது மிகவும் வழக்கத்திற்கு மாறானதா யிருந்தது. அது சற்று .......... அது வித்தியாசமான ஏதோ ஒரு காரியமாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் இன்றைக்கும் காரியமே என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேவன் காரியங்களை வழக்கத்திற்கு மாறாகவே செய்கிறார். மனிதன் அதைக் காணக்கூட முடியாத அளவிற்கு அது அவ்வளவு வழக்கத் திற்கு மாறானதாயிருக்கிறது. 21யோசேப்பினால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அது மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது. அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான். அவனோடு எவ்வித தவறும் இல்லா திருந்தது. அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான். ஒரு நீதிமானா யிருந்தான். ஆனால் அது எவ்வளவு வழக்கத்திற்கு மாறானதா யிருந்தது. பாருங்கள், யோசேப்பும் மரியாளும் நிச்சயிக்கப்பட்டிருக் கையில், அவனுக்கு அநேகமாக நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதிருக்கும் என்றே, அதைப்போன்றே இருக்கும் என்றே அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். ஆனால் இங்கே ஒருபோதும் சம்பவித்திராத ஏதோ ஒரு காரியத்தை நாம் கண்டறிகிறோம். ஒரு ஸ்திரீயானவள் இந்த மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டு, அதே சமயத்தில் தாயாக இருக்கப்போவது கண்டறியப்பட்டது. இது வழக்கத்திற்கு மாறானதாயிருந்தபடியால், யோசேப்போ அவளைத் தள்ளிவிட மனதாயிருந்தான். ஆனால் அந்த நெருக்கடியான நேரத்தில் சரியாக , தேவன் தம்முடைய தூதனை அனுப்ப, அவன் ஒரு சொப்பனத்தில் இவனுக்கு பிரசன்னமாகி, “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். யோசேப்பு அங்கிருந்து எழுந்தபோதோ, என்ன ஒரு புதிதாய் பிறந்த விசுவாசத்தை உடையவனாய் இருந்திருக்க வேண்டும். பாருங்கள், அவனுக்கு அதைக் குறித்து எந்த வியாக்கி யானமும் ஒதுபோதும் தேவையாயிருக்கவில்லை, சொப்பனமும் அடையாளங்களில் இருக்கவில்லை. அதுவோ தெளிவாக, ''உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' என்றே இருந்தது. அப்பொழுது வியாக்கியானத்தை அளிக்க தீர்க்கதரிசியே இல்லாதிருந்தனர். ஆகையால் அது நேரடியாக, அதைப்போன்ற சரியான தெளிவோடு வரவேண்டியதா யிருந்தது; தேவனுக்கு ...... தேவனிடத்திலிருந்து யோசேப்புக்கு வரவேண்டியதாயிருந்தது. இப்பொழுது ........ தேவன் அதை இரண்டாந்தரமான வழியில் செயலாற்றினார். 22நாம் நம்முடைய வேதபாடத்தைத் தொடுவதற்கு முன்பு, அது இங்கு நமக்கு சரியாக என்ன போதிக்கிறது? இதைத்தான் நமக்கு போதிக்கிறது. அதாவது நம்முடைய ஒவ்வொரு திறமையும் தேவனண்டை சமர்ப்பிக்கப் ....... ஒப்புவிக்கப்படுமாயின், அப்பொழுது அவரால் நம்முடைய சரீர அமைப்பிலுள்ள ஒவ்வொரு திறமையை யும் உபயோகிக்க முடியும். அவரால் நம்முடையச் சிந்தனையை, நம்முடைய சொப்பனங்களை, நம்முடைய உள்ளத்தின் அடியுணர்வுத் தளத்தை , நம்முடைய முதல் மன உணர்வுதளத்தை, நம்முடைய நாவை, நம்முடைய பாடல்களை, நம்முடைய கண்களை, நம்முடைய ........ அவர் உபயோகப்படுத்த முடியும். நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியமும் தேவனண்டை சமர்ப்பிக்கப்பட்டிருக்குமாயின், பாருங்கள், நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் தேவனண்டை சமர்ப்பித்திருந் தால், அப்பொழுது தேவனால் அதை உபயோகிக்க முடியும். அவர் ஒவ்வொரு வெளிச்செல்லும் வழியையும், உங்களுடைய ஒவ்வொரு பாகத்தையும் உபயோகிப்பார். அவர் அதைப் பயன்படுத்துவார். அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது அவருடைய நோக்கத்திற்கென்றும், அழைப்பிற்கென்றும், பரிசுத்த மாக்கப்பட்டிருக்குமாயின், அவர் அதை உபயோகிப்பார். 23இப்பொழுது, இன்றிரவு நாம் வெகுமதிகள் என்பதன் பேரில் பேசப்போகிறோம். நான் இதை ........ சகோதரன் நெவில் மேலே இருந்தபோது, நான் அங்கு ஏதோ ஒரு காரியத்தைக் குறிப்பெடுத்து எழுதி வைத்தேன். எனவே நான் : தேவனுடைய வெகுமதிகள் எப்பொழுதும் கண்டடைகின்றன ........ தேவனுடைய வெகுமதிகள் எப்பொழுதுமே அவைகளுடைய ஸ்தானங்களைக் கண்டடைகின்றன என்று தலைப்பிட விரும்புகிறேன். தேவனுடைய வெகுமதிகள் எப்பொழுதும் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் அது உண்மையாகவே அதனுடைய ஸ்தானத்தைக் ........ கண்டடையும் பொழுது ........ 24இப்பொழுது, இந்த சாஸ்திரிகள் வாங்கிவந்த ..... இல்லை அவரண்டைக்கு கொண்டு வந்த அந்த வெகுமதியைக் கவனியுங்கள். இன்றைக்கு நாம் வெகுமதிகளைப் பண்டமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டறிகிறோம். ஒவ்வொரு வரும் ஒரு வெகுமதியை பெற்றுக்கொள்ளும்படியாகவும், அடுத்த நாள் தனக்கு என்ன அளிக்கப் போகிறார் என்பதை கற்பனை செய்யும்படி முயற்சிக்க வேண்டியதாயுமிருக்கிறது. எனவே இவரும் அதற்கு ஒப்பீடான ஏதோ ஒன்றை அவருக்கு மிகப் பெரிய அளவில் அளிக்க முடியும். அது அவ்வாறில்லாவிட்டாலும் நல்லது, புத்தாண்டில் அதை அவர் ஈடுகட்டிவிட வேண்டுமென்றே அவர் உணருகிறார். ஆகையால் ஒவ்வொருவரும் இதை ஆராய்ந்து கொண்டு, கவலைப்பட்டுக்கொண்டு, பண்டமாற்றுதலை முக்கியமாகக் கொண்டு திரிந்து, கோடீஸ்வரர்களாயிருக்க, எப்படி அவர்கள் இதை நிறைவேற்றுவதில் வெற்றியடையப் போகிறார்கள்? அது - அது முற்றிலும் தவறாயிருக்கும்போது, அவர்களோ இந்த ஒன்றுக்கும், அதற்கும் மிகவும் அதிகமாக அளிக்கிறார்கள். அது - அது- அது - அது முற்றிலும்........ கிறிஸ்துமஸ்.......... இதோ, நீங்கள் அளிக்கக்கூடிய ஒரே ஒரு வெகுமதி தான் உண்டு, அது உங்களையேயாகும். உங்களைத்தாமே தேவனுக்கு அளியுங்கள். ஏனென்றால், தேவன் ஏற்கனவே தம்முடைய வெகுமதியை உங்களுக்கு அளித்துள்ளார். இப்பொழுது நீங்கள் தேவனுக்கு திருப்பித் தரும்படியாகக் கடன்பட்டிருக்கிற ஒரே ஒரு காரியம் உண்டு. அது உங்களைத்தாமே அவருக்கு அளிப்பதாகும். 25இப்பொழுது, இந்த சாஸ்திரிகள் வாங்கிவந்த ..... இல்லை அவரண்டைக்கு கொண்டு வந்த அந்த வெகுமதியைக் கவனியுங்கள். இன்றைக்கு நாம் வெகுமதிகளைப் பண்டமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டறிகிறோம். ஒவ்வொரு வரும் ஒரு வெகுமதியை பெற்றுக்கொள்ளும்படியாகவும், அடுத்த நாள் தனக்கு என்ன அளிக்கப் போகிறார் என்பதை கற்பனை செய்யும்படி முயற்சிக்க வேண்டியதாயுமிருக்கிறது. எனவே இவரும் அதற்கு ஒப்பீடான ஏதோ ஒன்றை அவருக்கு மிகப் பெரிய அளவில் அளிக்க முடியும். அது அவ்வாறில்லாவிட்டாலும் நல்லது, புத்தாண்டில் அதை அவர் ஈடுகட்டிவிட வேண்டுமென்றே அவர் உணருகிறார். ஆகையால் ஒவ்வொருவரும் இதை ஆராய்ந்து கொண்டு, கவலைப்பட்டுக்கொண்டு, பண்டமாற்றுதலை முக்கியமாகக் கொண்டு திரிந்து, கோடீஸ்வரர்களாயிருக்க, எப்படி அவர்கள் இதை நிறைவேற்றுவதில் வெற்றியடையப் போகிறார்கள்? அது - அது முற்றிலும் தவறாயிருக்கும்போது, அவர்களோ இந்த ஒன்றுக்கும், அதற்கும் மிகவும் அதிகமாக அளிக்கிறார்கள். அது - அது- அது - அது முற்றிலும்........ கிறிஸ்துமஸ்.......... இதோ, நீங்கள் அளிக்கக்கூடிய ஒரே ஒரு வெகுமதி தான் உண்டு, அது உங்களையேயாகும். உங்களைத்தாமே தேவனுக்கு அளியுங்கள். ஏனென்றால், தேவன் ஏற்கனவே தம்முடைய வெகுமதியை உங்களுக்கு அளித்துள்ளார். இப்பொழுது நீங்கள் தேவனுக்கு திருப்பித் தரும்படியாகக் கடன்பட்டிருக்கிற ஒரே ஒரு காரியம் உண்டு. அது உங்களைத்தாமே அவருக்கு அளிப்பதாகும். 26இங்கே ஒரு குட்டி பேரப்பிள்ளையை வைத்துக் கொண்டு அமர்ந்துள்ள சில ஜனங்களை நான் கவனித்தேன். அவனுடைய பெயர் .......... அந்த ஓர் - ஓர் இனிமையான , மனதிற் குகந்தக் குட்டி நபரான அந்தக் குட்டிப்பையனுடைய, அந்த ஒருவனுடைய பெயரும் ரிக்கி என்றிருந்தது. அந்தவிதமாகவே அவனும் இருக்கிறான். நீங்கள் சற்று அவனையும், அந்த விதமாய் உள்ள அவனுடைய சுபாவத்தையும் கவனித்துப் பாருங்கள். அவன் ........... நான் அவனுடைய பாட்டனாரிடத்தில் இல்லை யாரோ ஒருவரிடத்தில் கூறினேன், நான், “ அந்த தாயிடம் அந்தப் பைய னுடைய பெயரை மாற்றும்படிச் சொல்லுங்கள், அந்தப் பெயரையே மாற்றிவிடுங்கள், பின்னர் அந்தக் குழந்தைக்கு என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள்'' என்று கூறினேன். பாருங்கள், ஜனங்களாகிய நீங்கள் அதை நம்ப விரும்புகிறதில்லை. நாம் அதனை மிக நீண்ட காலமாகவே பார்த்து வாழ்ந்து வந்துள்ளோம் என்றே நாம் எண்ணிக்கொள்கிறோம். 27ஒரு பெயரில் ஏதோ ஒரு காரியம் இல்லாதிருக்கு மாயின், பின்பு ஏன் யாக்கோபு, யாக்கோபு என்று அழைப்பட்டவனா யிருந்த வரையிலும், அதன் பொருள், “எத்தன், வஞ்சகன்'' என்பதாகும், அந்தவிதமாகத்தான் அவன் இருந்தானல்லவா? ஆனால் அவன் கர்த்தரோடு முழு இரவும் போராடியபோது, கர்த்தர் அவனுடையப் பெயரை மாற்றினார் ....... அப்பொழுது அவன் ஏறக் குறைய அறுபது வயதுடையவனாயிருந்தான். அவர், யாக்கோபு என்பதிலிருந்து இஸ்ரவேல், ”தேவனுக்கு முன்பாக ஓர் இளவரசன்“ என்று அவனுடையப் பெயரை மாற்றினார். அப்பொழுது ஏன் ஆபிராம் ........ குழந்தை பிறப்பதற்கு முன்னர் ஆபிரகாம் என்று அழைக்கப்பட வேண்டியதாயிருந்தது? ஏன் சாராய் குழந்தை பிறப்பதற்கு முன்னர் சாராள் என்று அழைக்கப்பட வேண்டியதாயிருந்தது? ஏன் பவுல் ........ இல்லை அவனுடைய பெயர் சவுலா யிருந்தது, ஆனால் அவன் இயேசுவை சந்தித்தபோது, அவர் அவனை சவுலிலிருந்து “பவுலுக்கு” மாற்றினார். சீமோன், சீமோன் என்பதிலிருந்து பேதுருவுக்கு மாற்றப்பட்ட போது, அதன் பொருள், “சிறிய கல்” என்று பொருள்படுவதா யிருந்தது. நீங்கள் பெயரிட்டு அழைக்கப்படுவதில் அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் இருக்கின்றபடியால் அவர்கள் எல்லோருடைய பெயருமே மாற்றப்பட்டிருந்தன. நீங்கள் ஏதோ ஒரு காரியத்தைப் பேசும்போது, நான் அங்கே அதற்குள் நுழைய விரும்புகிறதில்லை. ஏனென்றால், அடுத்த ஞாயிறு இரவு அதற்கானது வந்து கொண்டிருக்கிறது, பாருங்கள், ஒரு வார்த்தையின் அடையாளம். ஆனால் இப்பொழுதோ இந்தக் காரியங்கள் அவ்வளவு உண்மையானவை என்பதை நாம் கண்டறிகிறோம். 28இப்பொழுது கவனியுங்கள், தேவன் ........ அது பாபிலோ னாயிருந்தது, அது இந்தியாவாயிருந்தது ........ கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த ......... மகத்தான மனிதனை, கற்றறிந்த மனிதன், வான சாஸ்திரியை, அந்தத் தெரிந்துக் கொள்ளப்பட்ட மனிதரை கண்டறியும்படியாயிருப்பதென்பது, இன்றிரவு அது என்னே ஒரு வினோதமானக் காரியமாயிருக்கிறது. அவர்கள் ஒருபோதும் ஒரே இரவில் முழுவதுமாய் வரவில்லை , ஓர் இரவு புறப்பட்டு அடுத்த இரவு அங்கு வந்தடைந்துவிடவில்லை. அவர்கள் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக அங்கே வந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒருபோதும் ஒரு முன்னணையில் இருந்த ஒரு சிறு குழந்தை யினிடத்திற்கு வரவில்லை. அவர்கள் ஒரு பிள்ளையினண்டைக்கு, ஒரு பிள்ளையினண்டைக்கு வந்தனர். எனவே ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளையே கொன்று போட்டான். பாருங்கள், அது ஒரு சிறு குழந்தையாய் ஒரு தொட்டிலில் படுத்துக் கிடக்க வில்லையென்பதை அறிந்திருந்தான். அப்படியிருந்திருந்தால் அவன் எல்லாக் குழந்தைகளையும் கொன்று போட்டிருப்பான். ஆனால் அவன் இரண்டு வயதிற்குட்பட்டிருந்தப் பிள்ளைகளைக் கொன்றால் அவரையும் நிச்சயமாக கொன்றுவிடலாம் என்றே அந்த வயதுடையப் பிள்ளைகளைக் கொன்று போட்டான். அவன் அவர்கள் எல்லோ ரையும், மிக அதிகமானோரைக் கொல்ல விரும்பாததை அறிந்திருந்த காரணத்தால், அவன் அந்தக் குறிப்பிட்ட காலத்திற் குட்பட்டதைக் குறித்தான். அவன் அப்படியே .......... ஏனென்றால் அவர்களில் அதிகமானோர் அவனுக்கு அடிமைகளைப் போன்றிருந் தனர். அவன் நிச்சயமாக அவரை அடைய ....... கொல்ல விரும்பி னான். எனவே அவன், “பிள்ளையோ ஏறக்குறைய இரண்டு வயதுடையதாயிருக்கும். ஆகையால் இரண்டு வயதிற்குட்பட்ட ஒவ்வொன்றையும் கொன்றுபோடுங்கள்” என்றான். புரிகின்றதா? அது, “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலு மாகிய கூக்குரல் ராமவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளை களுக்காக அழுது , அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையா திருக்கிறாள்” என்று தீர்க்கதரிசி உரைத்தது நிறைவேற்றப்பட்டது. 29இப்பொழுது இந்த சாஸ்திரிகள், மகத்தான மனிதர்கள் பாபிலோனில் இருந்ததையும், அவர்கள் அவருடைய நட்சத்திரத் தைக் கண்டதையும், ''நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத் தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்'' என்று அவர்கள் கூறினதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் கிழக்கிலிருந்து வந்து, அவர்கள் அங்கே நட்சத்திரத்தைக் கண்டு மேற்கே சென்றனர். ஏனென்றால், இந்தியா மேற்கிலுள்ளது, பாபிலோ ........ பாலஸ்தீனாவின் ........ வடமேற்கு, அவர்கள் டைகிரீஸ் நதியினூடாக வந்து, அந்தச் சமவெளிகளைக் கடந்து, பெத்லகேமிற்கு வந்து அங்கே அவர்கள் அந்தப் பிள்ளையைக் கண்டனர். யோசேப்பும் மற்றவர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவே யில்லை என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் நேராக நாசரேத் திற்குச் சென்று அங்கேயேப் பிள்ளையை வளர்த்திருந்தனர். இப்பொழுது, அவர்கள் ........ அளித்தனர் என்று நாம் இங்கே காண்கிறோம் .... இந்த மனிதர், வான சாஸ்திரிகளாயிருந்து கொண்டு, நட்சத்திரங்களையே ஆராய்ச்சி செய்து கொண்டு, இந்த இரகசியமான வான மண்டல ஒளிகள் அங்கே மேலே பிரசன்ன மானதைக் கண்டு, ஏதோ காரியம் சம்பவிக்கப்போவதாயிருந்தது என்பதையும், அதாவது மேசியா, வானங்களையும், பூமியையும் ஆளுகை செய்பவர் பிறக்க வேண்டியவராயிருந்தார் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் தெய்வீகத்தன்மை ஒரு வீட்டிற்குள், ஒரு மானிட சரீரத்திற்குள் அடைத்து வைக்கப் படும் என்பதனை அறிந்து வந்திருந்தனர். ஏனென்றால், அவர் களுடைய சாட்சியை உங்களுக்கு காண்பிக்கும்படியாக ....... உங்க ளுடைய ஜீவியமானது உங்களுடைய வார்த்தைகளைக் காட்டிலும், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதையே பொருட்படுத்தாத அளவிற்கு சத்தமிடுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதனைக் கொண்டே நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். 30இந்த ஜனங்களை, இந்த வானசாஸ்திரிகளைக் கவனியுங்கள். அவர்கள் அவருக்கு ... கொண்டு வந்தனர். அவர்கள் அவருக்குக் கொண்டுவந்த வெகுமதிகள், அவர்கள் அவர் என்னவாயிருந்தார் என்று எண்ணியிருந்தனர் என்பதை அடையாளங்காட்டின. அவர்கள் அவருக்குப் பொன்னையும் தூபவர்க்கத் தையும் மற்றும் வெள்ளைப் போளத்தையும் கொண்டு வந்தனர். இப்பொழுது இந்த அடையாளங்கள் என்ன என்பதைக் கவனியுங்கள். அதாவது நான் இப்பொழுது உங்களிடத்தில் ........ இந்த அடையாளங்கள் எதைப் பொருட்படுத்துகின்றன என்பதைக் குறித்துப் பேச விரும்புகிறேன். இப்பொழுது, நான் இங்கே சில வேத வசனங்களை எழுதி வைத்திருக்கிறேன், கர்த்தருக்குச் சித்தமானால், நாம் அதனை ஒரு நிமிடம் சற்று வாசிப்போம். இப்பொழுது: பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் இப்பொழுது: வேதாகமத்தில் பொன் ........ அது எப்படியாய் கிறிஸ்துவுக்குப் பொருந்துகிறது, ஏனென்றால் பொன் தெய்வீகத்தைக் குறித்துப் பேசுகிறது. பொன் தெய்வீகமாயிருக் கிறது. நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் அதற்குச் செல்வோம். தூபவர்க்கம் “சேவையைக்” குறித்துப் பேசுகிறது. வெள்ளைப் போளம் “மரணமாயிருக்கிறது.” தேவன், தெய்வீகம், மரிக்கும்படியான சேவையில். அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். அவர்கள் கொண்டுவந்த அந்தக் காரியமே அவர் என்னவாயிருந்தார் என்று அவர்கள் எண்ணியிருந்தனர் என்பதை அடையாளங்காட்டின. 31இன்றைக்கு, “நாம் அவரண்டைக் கொண்டு வருகிற காரியங்கள் அவரைக் குறித்த நம்முடைய சிந்தனைகள் என்ன வாயிருக்கின்றன என்பதையே அடையாளங்காட்டுகின்றன'' என்று நான் அதை நமக்கே கூறுகிறேன். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்களா? புரிகிறதா? நீங்கள் ஒரு ........ நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசித்தால், அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தால், நீங்கள் கொண்டுள்ள எல்லாவற்றையும் அதற்கு கொடுப்பதன் மூலம் நீங்கள் அதை அடையாளங்கண்டு கொள் வீர்கள். புரிகின்றதா? ஆனால் இது சிறந்த ஜனங்களோடு சபை யைச் சுற்றிலும், அதைப்போன்ற காரியங்களோடு இணைந்திருக் கும்படியான ஒரு நல்ல ஸ்தலமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் எதை அளிக்கிறீர்கள் என்பதைப் பொருத்த தாய் அது உள்ளது. (வெறுமையான சபையில் உள்ள சிலரோடு மையான நேரங்கள் அல்லது அதைப் போன்ற காரியம்). ஆனால் நீங்கள் - நீங்கள் அதை உண்மையாகவே உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால், அப்பொழுது நீங்கள் உங்களுக் குள்ளே ஒவ்வொன்றையும் அதற்கு அளிப்பீர்கள், புரிகின்றதா? அது நீங்கள் உண்மையாகவே செய்தியை விசுவாசிக்கிறீர்கள் என்றும், நீங்கள் அது சத்தியமாயிருக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறீர்கள் என்றும் உங்களை அடையாளங்காட்டுகிறது. அனேக ஜனங்கள், இந்த அளவிற்குத்தான் என்னால் விசுவாசிக்க முடிகிறது. என்னால் அவ்வண்ணமேதான் விசுவாசிக்க முடிகிறது என்கிறார்கள். சீஷர்கள் ...... நான் கடைசி முறையாக இங்கே அதன் பேரில் நான் பேசினேன் என்று நான் நினைக்கிறேன்; அதாவது விசுவாசிகள், பாவனை - விசுவாசிகள், அவிசுவாசிகள், அதுவாகத்தான் அது இருந்ததல்லவா? நான் ......... அதன் பேரில் இங்கே பேசினேன் அல்லவா? புரிகின்றதா? ஒவ்வொரு நபரைப் பற்றியும், அவர்களுடைய வகை என்னவாயிருக்கிறது என்பதைப் பற்றியுமேயாகும். பாருங்கள், அதுவோ அவர்களால் அதைக் குறித்து அந்த அளவிற்குத் தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மீதமுள்ளதையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஒரு நிலைக்கு வருவதாயிருக்கும். 32இப்பொழுது, இந்த வெகுமதிகள் பூமியின் மேல் கிறிஸ்துவினுடைய பயணத்திற்கும், பூமியின் மேல் இங்கே பிறந்த ஒரு குழந்தைக்கும் எப்படியாய் பொருந்திக்கொண்டிருந்தன. வான சாஸ்திரிகள் அவருக்குக் கொண்டு வந்த இந்த வெகுமதிகள் தேவனிடத்திலிருந்து வந்த அவருடைய கட்டளைக்கும், பூமியின் மீதில் அவருடைய பயணத்திறகும் எப்படியாய் சரியாக அப்படியே பொருந்தின. இப்பொழுது, முதலாவது காரியம்; தேவன். இது தேவனாய் இருந்தது. இயேசு மனித ரூபத்தில் தேவனாயிருந்தார். அதை ஏற்றுக் கொள்வது ஜனங்களுக்கு கடினமாய் இருந்தது, “அவர் தேவனாயிருந்தார்” என்பது இன்றைக்குக்கூட அவ்வாறே யுள்ளது. அவர் ........ அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார். அவர் தேவனாயிருந்ததைக் காட்டிலும் வேறொன்றாயும் குறைந்திருக்க வில்லை. அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். அவர் தம்முடைய சொந்த சிருஷ்டிப்பில் சிருஷ்டிகராயிருந்தார். இப்பொழுது அது ......... அவர் தம்முடைய சிருஷ்டிப்பில், சிருஷ்டிப் பினால், சிருஷ்டிப்பிற்காக சிருஷ்டிகராயிருந்தார். அவர் தம்முடைய சிருஷ்டிப்பில், தம்முடைய சிருஷ்டிப்பினால், தம்முடைய சிருஷ்டிப் பிற்காக சிருஷ்டிகராயிருந்தார். நாற்றிசைகள் யாவுமே, முழு காரியமும் தேவனுக்குள் இருந்தன. நீங்கள் காணவில்லையா? தேவனுடைய பரிபூரணமாயிற்றே! அவர் சிருஷ்டிகராயிருந்தார் என்ற அளவில் அவர் தேவனாயிருந்தார். அவர் பூமியின் மேல் ஒரு சரீரத்தில் இருந்தபோது. (ஒரு தற்காலிகமான நேரத்திற்கு) அதன் பொருள் என்னவெனில் அவருக்கு ஒரு துவக்கம் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் ஜீவிக்கும்படியான ஒரு சரீரத்தை அவர்தாமே சிருஷ்டித்தார். தேவன்தாமே தமக்காக ஒரு சரீரத்தைச் சிருஷ்டித்தார். புரிகின்றதா? அதாவது இந்த சிருஷ்டிப்பின் மூலம் அவர் சிருஷ்டித்திருந்து இழந்து போன சிருஷ்டிப்பை இரட்சிக்கும்படிக்கு செய்தார். 33மனிதனால் எந்தக் காரியத்தையுமே அழிக்க முடியாது, ஒரு காரியமும் கிடையாது. உங்களால் முழுமையாக எந்தக் காரியத்தையுமே அழித்துவிட முடியாது. நீங்கள் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, அதை மேலேயே எரிக்கலாம். நீங்கள் ஒரு கட்டிடத்தை கீழே எரிக்கலாம். நீங்கள் ஒரு மரத்தை கீழே எரிக்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை அழித்துவிடவில்லை. நீங்கள் ........ அங்குள்ள அந்த வெப்பமானது, அந்த அக்கினி அதை உடைக்கிறது, அது இரசாயனங்களை மாத்திரமே வெடித்து சிதறடிக்கிறது. அவைகள் துவக்கத்தில் என்னவாயிருந்தனவோ அந்த நிலைக்கே திரும்பி விடுகின்றன. அவைகள் அழிக்கப்படுகிற தில்லை. நீங்கள் ஒரு துண்டுக் கட்டையை எரித்தால் (உலகம் கூறுகிறது ..... நாம் தேவனைப் போல் நித்தியத்தில் ஜீவித்திருந்தால், அந்தக் கட்டையிலிருந்து வந்த இரசாயனங்கள், அந்த அக்கினி அதனுடைய மூல துவக்க நிலைக்குத் திரும்பச் சென்று, அதனுடைய .......... அது என்னவாயிருந்தாலும், அணுக்களின் உடைப்புப் போன்றவை, உலகமோ, “நாம் கோடிக்கணக்கான வருடங்களாக நிற்கிறோம்'' என்கிறது.) அது மீண்டும் நேராக திரும்பி வந்து, மற்றொரு மரமாய், அது இருந்த வண்ணமாகவே சரியாக இருக்கக் கூடும். உங்களால் எந்தக் காரியத்தையுமே அழித்துவிட முடியாது. ஏனென்றால் அது ஒரு உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. ஆமென்! ஓ, அது இப்பொழுது என்னை பக்தி பரவசமடையச் செய்கிறது. புரிகின்றதா? தேவன் கூறுகிறது என்னவோ, அது என்றென்றைக்குமாய் நிற்கிறது. ஆமென்! பாருங்கள், நீங்கள் அழித்துவிட முடியாது. நாம் இந்தப் பூமியின் ஒரு பாகமாக இருக்கிறோம். நாம் ஒருபோதும் முற்றிலுமாக அழிக்கப் படவே முடியாது. இல்லை ஐயா, பாவம் (ஆத்துமா) அழிக்கப்படும், நாம் அதைத் தெளிவாக உணருகிறோம். ஆனால் நாம் வாழ்கின்ற சரீரமோ அழிக்கப்படவே முடியாது. புரிகின்றதா? 34இப்பொழுது, ஆகையால் தேவன்தாமே ஒரு சரீரத்தை சிருஷ்டித்தார், அவர் சிருஷ்டிகராயிருந்து, தம்முடைய சொந்த சிருஷ்டிப்பை சிருஷ்டித்து, அவருடையச் சிருஷ்டிப்பில் இழந்து போயிருந்தவர்களை (அது நீங்களும், நானும், சிருஷ்டிப்புகளின் காலம்) அவர் இந்த சிருஷ்டிப்பின் மூலம் இரட்சிக்கப்படும்படிக்குச் செய்தார். அவருடைய-அவருடைய வார்த்தை சரியாக அதைக் காண்பித்தது ........ அவர் சிருஷ்டிகரைப் பார்க்கிலும் குறைவுள்ள வராயிருக்கவில்லை என்பதை அவரும் அவருடையக் கிரியைகளும் நிரூபித்தன. அவர் ஒரு துண்டு அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டார். அந்த ஒரு துண்டு அப்பத்தையே தொடர்ந்து பிட்டு, அதிலிருந்து ஐந்தாயிரம் பேர்களை போஷித்தார். மீதியான துணிக்கைகளை ஏழு கூடைகள் எடுத்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் முழுமையாய் அப்பத்தால் திருப்தியடைந்திருந்தனர். அவர் மீனை எடுத்து, அந்த மீனிலிருந்தே பிட்டார். இப்பொழுது அவர் ஆதியில் அந்த மீனை சிருஷ்டித்தார் என்று நாம் அறிந்திருப்போமானால் நலமாயிருக்கும். அவர் ஆதியில் அந்த அப்பத்தை சிருஷ்டித்தார். ஆனால் அவர் அந்த மீனை எடுத்து, அந்த மீனிலிருந்தே பிட்டார். ஓர் உயிருள்ள மீனாய் இருந்து வந்து, அதன் பின்னர் அவிக்கப்பட்டது இல்லை - இல்லை பொரிக்கப்பட்டது; அவர் அதிலிருந்து பிட்ட போதெல்லாம், அது என்னவாயிருந்ததோ (தணலின் மேல் சுடப்பட்டிருந்ததோ அல்லது பொரிக்கப்பட்டிருந்ததோ) அது திரும்பவும் முழுமையாக வளர்ந்த நிலையினை அடைந்து (அவர் அதைப் பிட்ட அதே நிமிடத்தில்) மற்றொரு அவிக்கப்பட்ட இல்லை பொரிக்கப்பட்ட மீனாயிற்று. அது அற்புதமாயிருக்கவில்லையா? அவர் யேகோவாவைக் காட்டிலும் குறைவுள்ளவராயிருக்கவில்லை என்பதையே அது காண்பித்தது. அதாவது அவர் யாராயிருந்தார் என்பதை வெளிப்படுத்த, அவருடைய சிருஷ்டிப்பின் மூலம் அவர் தம்முடைய சொந்த சிருஷ்டியை எடுக்க முடிந்த சிருஷ்டிகராய் இருந்தார். அல்லேலூயா! அவர் என்னவா யிருந்தார் என்பதை அது நிரூபித்தது. அவர் தெய்வீகத்தன்மையா யிருந்தார். ஆகையால் பொன் அவருடைய பிறப்பின் காணிக்கை யில் அவருக்குப் பொருந்துகிறதாயிருந்தது. அவர் மாம்சமான தெய்வீகத்தன்மையாயிருந்தார். 35நான் தற்செயலாக ஏதோ ஒன்றை ........ வாய்விட்டுக் கூறும்படி ....... ஆகையால் ...... இந்த ஜெபக்கூட்டத்தில் இன்றிரவு நமக்கு மத்தியில் அந்நியர்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் ஏதோ ஒரு காரியத்தைக் கூறட்டும். இயேசு, அவர் இங்கு இருந்தபோது ...... ? இப்பொழுது இது சிந்திப்பதற் காகவேயன்றி மற்ற எதற்காகவுமல்ல ...... அனேகமாக ...... சரியாகக் கூறினால் ஆராய்வதற்காகவேயாகும். கவனியுங்கள், சற்று சிந்திப்பதற்காகவே, இயேசு, பரிசுத்த யோவான் 14:12 ல், “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக் கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவை களைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்'' என்று கூறினார். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? கவனியுங்கள். இப்பொழுது, அது தேவ குமாரன் விசுவாசிக்கு வாக்களித்துக் கொண்டிருந்தார், அதாவது அவர் செய்ததைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் (இந்தக் கடைசி நாட்களில்) அதாவது விசுவாசி அவர் செய்ததைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வான். பரிசுத்த யோவான் 14 வது அதிகாரம் 12 ம் வசனம், அது சரிதானே? இயேசு அதைக் கூறினார் என்று விசுவாசிக்கிறீர்களா? கவனியுங்கள், இயேசு அப்பத்தை சிருஷ்டித்தபோது; அவர் ஒரு துண்டு அப்பத்தை எடுத்து, ஏற்கனவே அப்பமாக்கப் பட்டிருந்த அப்பத்தை சிருஷ்டித்தார். அவர் மீனை சிருஷ்டித்த போது, அவர் முதலில் ஒரு மீனாக சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு மீனை எடுத்து, அதிலிருந்து மற்றொரு மீனைக் கொடுத்தார். அது சரிதானே? அவர் திராட்சை ரசமாகும்படி மறைந்திருந்த தண்ணீரை எடுத்து, அதிலிருந்து திராட்சை ரசத்தை உண்டு பண்ணினார். அது சரிதானே? ஆனால் நாம் இந்தக் கடைசி நாட்களில் நமக்கு மத்தியில் அவரைக் கண்டிருக்கிறோம். அங்கே எந்தக் காரியமும் நின்று கொண்டிராமலே இருக்க, காரியங்களை சிருஷ்டிக்க கண்டிருக்கிறோமே! அது சரிதானே ? அணில்களே இல்லாத இடத்தில் ஓர் அணிலை சிருஷ்டிக்கும்படியாயிற்றே! சரியே! ஓ, அவர் ......... தேவனாகவே தரித்திருக்கிறார். அவர் அப்பொழுது இருந்ததைப் போன்றும், எப்போதும் இருந்ததைப் போன்றும், அல்லது எப்போதும் இருப்பதைப் போன்றும் அப்படியே இன்றைக்கும் அவ்வளவு தெய்வீகத்தன்மையுடையவராகவே இருக்கிறார். அவர், “நீங்கள் ......... பற்றிப்பிடிக்கவும், அதிலிருந்து எந்த ஒரு காரியமும் இல்லாமலேயே இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை, அதை உரைக்க, அது அவ்வண்ணமாகவே உண்டாகும் ” என்று சவாலிடும் இருதயங்கள் இதை விசுவாசிக்கும்படியாக இன்னமும் தேவனாயிருக்கிறார். 36இப்பொழுது கவனியுங்கள், நாம் அவருடைய ....... என்று கண்டறிகிறோம். அவர் அடையாளங்காட்டினார். அவர் செய்த கிரியைகளே அவர் தெய்வீகத் தன்மையுடையவராயிருந்தார் என்று அடையாளங்காட்டின. அவர் அவ்வாறிருந்தார் என்பதை காண்பித்தன. ஏனென்றால் அவர், “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டிய தில்லை ' என்றார். இன்றைக்கு கிறிஸ்தவனோ, “நான் என் இரட்சகரின் கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” என்று கூறமுடியாதா? புரிகின்றதா? “பிதா என்னை அனுப்பினதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்” . நீங்கள் அந்தக் கிரியைகளை, அவரை அனுப்பின பிதாவினுடைய சிருஷ்டிப்பின் கிரியைகளை செய்திருந்தால், அப்பொழுது அது ஒரு சிருஷ்டிப்பாயிருக்கிறது ..... நம்மை அனுப்புகிற கிறிஸ்து (சிருஷ்டிகர்) சிருஷ்டிகராகிய கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்கிறார். புரிகின்றதா? 'பிதா என்னை அனுப்பிது போல நானும் உங்களை அனுப்புகிறேன். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டிய தில்லை “ ஆகையால் இன்றைக்கு கிறிஸ்தவன் கிறிஸ்துவானவர் செய்த அதே ஜீவியத்தை செய்ய வேண்டியவனாயிருக்கிறான், அல்லாவிட்டால், ''அது அவண்ணமாயிருக்கவில்லையே'' என்று கூற நமக்கு உரிமையுண்டு. 37இப்பொழுது கவனியுங்கள், அவருடைய கிரியைகள் அவரை சிருஷ்டித்தன ...... இல்லை சிருஷ்டிகராயிருக்க வேண்டும் என்று அடையாளங்காட்டின. அவர் “சிருஷ்டிகராய்” இருந்தார் என்றும், அவர் அதிலிருந்து எந்த வழியிலும் விலகவில்லையென்றும், அவர் செய்த அவருடைய கிரியைகளே அவருடைய ஜீவியத்தி னுடைய சாட்சியை முடிசூட்டின. ஆகையால், அவர்கள் தங்களுடைய வெகுமதிகளாகிய பொன்னை அளித்தபோது, அவர்கள் தங்கள் வெகுமதிகளினால் தேவனோடு இசைந்த பொருத்தத்தில் பரிபூரண மாயிருந்தனர். அவர்கள் அவருக்கு பொன்னை அளித்தனர். அது அவருக்கு தெய்வீகத்தன்மையை அடையாளங்காட்டினது. எப்பொழுதுமே, ஒரு கிரீடம், பொன்னாலான கிரீடம் ........ அந்தப் பொன்னாலான தலையோ, இராஜா நேபுகாத்நேச்சாரினுடைய ... எல்லாமே நீங்கள் பாருங்கள், அது ..... எப்பொழுதுமே தெய்வீகத் தன்மையுடையது பொன்னினால் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பொழுது; தூபவர்க்கம். நாம் இவைகளைத் துரிதமாக புரிந்து கொள்ள விரும்புகிறோம். தூபவர்க்கமானது யேகோவா விற்கு பணிவிடைக் காணிக்கையாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இந்த வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்ள வேண்டு மானால், லேவியராகமம் 2:2 மற்றும் 16:6 முதல் 15 வரை. அது யேகோவாவிற்கு காணிக்கையைப் படைக்கும்படியான ஆசாரியத்துவ கட்டளையாயிருக்கிறது என்பதை நாம் கண்டடைகிறோம். அவன் காணிக்கையை ஏறெடுத்துப் படைத்தபோது, அது ஒரு பாவ நிவாரண பலிக்கான தூபவர்க்கத்தோடு கலக்கப்பட்டு, படைக்கப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் பல்வேறுபட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு அதனைக் கலந்தனர். போஜனபலிக்காகவும், அசைவாட்டப்படும் காணிக்கைக்காகவும் தூபவர்க்கம் சேர்க்கப் பட்டது. ஏனென்றால் அது தூபவர்க்கத்தால் அபிஷேகிக்கப்பட்டிருந் தால், அப்பொழுது அது யேகோவாவிற்கு ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாயிருந்தது. அதன் பொருள் என்னவெனில் அது தேவனுக்கு, யேகோவாவிற்கு ஒரு பணிவிடையாயிருக்கிறது. இப்பொழுது, அவர் தெய்வீகத்தன்மையாயிருக்கிறார் என்று நாம் கண்டறி கிறோம். அவர்கள் அவருக்குத் தூபவர்க்கத்தைக் கொண்டு வந்தனர். அது அவர் யேகோவாவிற்கு ஒரு பணிவிடையாயிருந் தார் என்பதற்கு ஒரு மாதிரியாயிருந்தது. இயேசு யேகோவா வினுடைய ஊழியக்காரனாயிருந்தார். 38இப்பொழுது, பரிசுத்த மத்தேயு 12:15 முதல் 21 வரையில் உள்ள வசனங்களில், ''இதோ என் தாசன், அவரில் நான் பிரியமாயிருக்கிறேன்“. (அவர் இருந்தார்) ”நான் என் பெலனை அவர் மீது வைக்கிறேன்“ என்ற யேகோவாவினுடைய ஊழியக்கார னாயிருந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆகையால் அவருடைய ஜீவியமானது யேகோவாவினுடைய சேவைக்கென்றே தூபவர்க்கத்தால் அபிஷேகிக்கப்பட்டிருந்தது. என்னே ஒரு வெகுமதியை அந்த வானசாஸ்திரி அறிந்திருந்தார். பாருங்கள், அது அவர்கள் அளித்த வெகுமதிக்கு ...... ஏதோ ஒரு காரியமாய், இயசுவை யேகோவாவினுடைய ஊழியக்காரராக அடையாளங் காட்டும்படியான ஏதோ ஒரு காரியமாயிருந்தது. இப்பொழுது, நம்மால் மாத்திரம் அதைச் செய்யக் கூடுமானால், நம்முடைய ஜீவியங்களை அடையாளங்காட்டக் கூடுமானால் நலமாயிருக்கும். பாருங்கள், நம்முடைய ஜீவியங்கள் யேகோவாவின் ஊழியக்காரராக அடையாளங்காட்டப்பட வேண்டும். அதற்காகத்தான் தூபவர்க்கமானது இருந்தது. அது அவரை யேகோவாவினுடைய ஊழியக்காரராக்கிற்று. இப்பொழுது, வெள்ளைப்போளம், வெ-ள்-ளை-ப்-போள -ம், மரணத்தின் அபிஷேகமாயிருந்தது. நாம் பரிசுத்த யோவான் 19 வது அதிகாரம், 39 வது வசனத்தில், அது இயேசுவின் அடக்க ஆராதனைக்கு செல்வதைக் கண்டறிகிறோம். மரியாளும் மற்றவர்களும் சென்றபோது, அவர்கள் இந்த வெள்ளைப்போளத்தை அவருக்கு பூசித்தடவும்படிக்கு கொண்டு சென்றனர். ஏனென்றால் அவர் யேகாவோவிற்கான மரணத்தின் ஊழியக்காராக இருக்க வேண்டியிருந்தது. புரிகின்றதா? யாரோ ஒருவர் மரிக்க வேண்டிய தாயிருந்தது. அது தேவனுக்காக செய்யப்பட வேண்டியதாயிருந்த ஒரு சேவையாயிருந்தது. தேவன், அவரைத்தவிர வேறு யாருமே அதைச் செய்வதற்கு தகுதியாயிருக்கவில்லை. ஆகையால் வெள்ளைப்போளத்தை - அந்த வெள்ளைப்போளத்தைக் கொண்டு வருதல், அது தெய்வீகத்தன்மையோடிருப்பதையும், பணிவிடை யோடிருப்பதையுமே காண்பிக்கிறது. அதாவது அவர் வெள்ளைப் போளத்தினாலுங்கூட அபிஷேகிக்கப்பட்டிருந்தார்; அதாவது இந்தத் தெய்வீகமானவர் பூரணமற்றவர்களை இரட்சிக்கும்படியாக மரணத்திற்குட்பட வேண்டியவராயிருந்தார் . ஓ , என்னே ஒரு மகத்தான காரியம்! 39முழு சிருஷ்டியும் இழக்கப்பட்டிருந்தது. நாம் அதை ஏழு முத்திரைகளினூடாகச் சென்று பார்த்தோம். பாருங்கள், முழு சிருஷ்டியும் இழக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காரியமும் இழக்கப் பட்டுப் போயிருந்தது. அவை யாவுமே சாத்தானுக்குச் சொந்த மானது. அவன் அதற்கு சுதந்திரவாளியானான். அவன் அதை இன்னும் தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறான். அவன் நிச்சய மாகவே அதைச் செய்கிறான். அந்தக் காரணத்தினால் தான் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த எல்லாத் தொல்லைகளையும் உடையவர்களாயிருக்கிறோம். அவன் ஒவ்வொரு இராஜ்ஜியத்தையும் கட்டுப்படுத்தியாளுகிறான்; சாத்தானே செய்கிறான். ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு இராஜாவும், ஒவ்வொரு இராஜ்ஜியமும் சாத்தானால் கட்டுப்படுத்தி யாளப்படுகிறது. முழு உலகமும் சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. அந்தக் காரணத்தினால்தான் நாம் கொண்டுள்ள தொல்லைகளை உடையவர்களாயிருக்கிறோம். எந்த வேதாகம மாணவனும், இல்லை எந்தக் காரியமும், அது சாத்தான் என்பதை உங்களுக்குக் கூறமுடியும் ........ நல்லது வேதாகமம்தானே அவன் அதைச் செய்தான் என்றே கூறுகிறது. பாருங்கள். அதாவது அவன் உலகைக் கட்டுப்படுத்தியாளுகிறான். ஆனால் கிறிஸ்துவோ அதற்கு சுதந்திரவாளியாயிருப்பார். ஏனென்றால் இப்பொழுது அவர் நம்முடைய மீட்பராயிருக்கிறார். அவர் முழு சிருஷ்டியையும் மீட்கும்படிக்கு வந்தார். தேவனைத் தவிர வேறெதுவுமே அதைச் செய்திருக்க முடியாது. 40அந்தக் காரணத்தினால் தான் தேவன் ஒரு மனிதனுக்குப் புறம்பே எந்த ஒரு காரியத்தையும் செய்கிறதில்லை. அவர் எப்பொழுதுமே ஒரு மனிதனின் மூலமாக கிரியை செய்கிறார். ஏனென்றால், அவர் ஒரு மனிதனை உபயோகப்படுத்த வேண்டிய தாயிருந்தது. அவர் தம்முடைய இரட்சிப்பின் தன்மையை வெளிக் காட்டும்படி உபயோகிக்கப்பட வேண்டியவனாய் ஒரு மனிதன் இருக்கிறான். அவர் அவனை தம்முடையச் சாயலில் உருவாக்கி, அவரைப் போன்ற ஏதோ ஒன்றை அவனுக்கு உருவாக்கி, அவனை சுயாதீனத்தின் பேரில் வைத்து, அவன் விரும்பின எந்த வழியிலும் அவனைச் செயல்படச் செய்கிறார். அவர் தன்னுடையத் தெரிந்து கொள்ளுதலைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தெரிந்து கொள்ளுதலை அவனுக்கு அளிப்பதின் மூலம் அந்த மனிதன் விழுந்துபோவான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகையால் அந்தக் காரணத்தால் அவர் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர் திரும்பி, மனிதனை அவருக்கு ஒரு பங்காளியாக்கி, அவர் ஒரு மனிதனின் மூலமாக அதைச் செய்கிறதைத் தவிர வேறெதையுமே செய்கிறதில்லை. மீட்பின் முழு கிரியையுமே ஒரு மனிதனின் மூலமே உண்டாகிறது. அல்லேலூயா! மரணம் முதலாம் மனிதனின் மூலமாய் உண்டானது. ஜீவனோ இரண்டாம் ஆதாமின் மூலமும் உண்டானது. புரிகின்றதா? அங்குதான் காரியம், அவர் அதற்காக ஒரு மனிதனை உபயோகிக்க வேண்டியிருந்த காரணத்தால், அவர் வேறெதையும் செய்கிறதில்லை. எனவே அவர் மீண்டும் திரும்ப மீட்கும்படியாக ஒரு மனிதனை உபயோகிக்கிறார். ஆகையால் தெய்வீகமானவர் யேகோவாவானார் ....... இல்லை யேகோவா ..... அவர் தெய்வீகத்தன்மையாயிருக்கிறார். அவர் ஒரு குழந்தை யானார். அவர் பாவியை மீட்கும்படியாக, அவர் பாவ ரூபத்தில் மாறினார். பாருங்கள், அங்குதான் முழு காரியமும் உள்ளது. 41இப்பொழுது என்னவென்பதைப் பாருங்கள் எவ்வளவு அழகாக அந்த வெகுமதிகள் இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்துகின்றன என்பதைப் பாருங்கள். பொன், அவருடைய தெய்வீகத் தன்மையைக் குறித்துப் பேசுகிறது. இப்பொழுது, அவர்கள் அஞ்ஞானிகளாயிருக்கவில்லை. அவர்கள் தேவனால் ஏவப்பட்டிருந்தனர். அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைக் கற்பனை செய்துக் கொண்டிருக்கவில்லை. அது அங்கே சரியாக நிரூபிக்கிறது. வான சாஸ்திரிகளும்கூட, அதாவது அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதைக் கண்டிருந்தனர். ஏனென்றால் அவர்களுடைய சொந்த வெகுமதிகளே , அவர்கள் அவைகளை அளித்தபோது, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதைக் கண்டனர் என்ற அவர்களுடைய சாட்சியைக் குறித்து நன்கு பேசப்பட்டு அடையாளங்காட்டின. ஏன்? காரணம் ஏன்? அது பரிபூரணமாய் பேசுகிறது. அவர்கள் பொன்னைக் கொண்டு வந்தனர், “தெய்வீகத் தன்மை”. அவர்கள் தூபவர்க்கத்தைக் கொண்டு வந்தனர், ''பணிவிடை'', அவர்கள் வெள்ளைப்போளத்தை அவருடைய “மரணத்திற்காகக்” கொண்டு வந்தனர். அவர் ஒரு குழந்தையா யிருந்தபோதே, ஆமென், விழுந்து போன மனிதனை மீட்கும்படியாக, தெய்வீகத்தன்மை கொண்டவர் மாம்சத்தில் மரணத்திற்குட்படுவார் என்பதையே அது காண்பிக்கிறது. ஆமென், ஜனங்கள் எப்படி அதைப் புறக்கணிக்க முடியும்? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கிருந்து வந்தோம்? இல்லையென்றால் நாம் இங்கு இருப்பதால் என்ன வேலை இருக்கிறது? நாம் இங்கே வெறுமனே தற்செயலாக வைக்கப்பட்டிருக்கவில்லை. நாம் இங்கு ஒரு நோக்கத்திற்காக வைக்கப்பட்டோம். நாம் அந்த நோக்கத்திற்கு தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆதாம் ஆதியில் செய்தது போன்றே, நாம் அதற்கு தொண்டூழியம் செய்யமுடியும் அல்லது புறக்கணிக்க முடியும் என்ற சுயாதீன அடிப்படையின் பேரில் நாம் இன்னமும் முற்காலத்திய நிலையில் இருக்கிறோம். 42இங்குள்ள அந்தப் பெண் பிள்ளைகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சகோதரனே ... அது என்ன? .... அந்தப் பெண்மணி இழைப்பேழையை இசைத்தாள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பாடினபோது, அவைகளை நான் - நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இங்கே மேல் உள்ள அந்த வீதியில் நாங்கள் அவர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தங்களுடைய முழு ஜீவியத்தையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித் திருக்கிற ஒரு சிறு குடும்பமாய் அது உள்ளது. அந்தக் குடும்பத் தினரை நோக்கிப் பாருங்கள். அது எவ்வளவு ஒழுங்காய் உள்ளது. அந்தச் சிறு பெண் பிள்ளைகளை நோக்கிப் பாருங்கள். அவர்கள் பத்தொன்பது வயதிற்குட்பட்ட வாலிபப் பெண்மை கொண்ட பருவத்தினரின் மாதிரியாய் இங்கே நின்று கொண்டிருந்தனரே. கவலைப்பட ....... வேண்டியதில்லை ......... 43ஒரு சில வாரங்களுக்கு முன்னர் நான் சென்றிருந்தேன் ....... இப்பொழுது அங்கே நியூயார்க்கில் உள்ள அந்த இடத்தின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பீட்னிக்குகள் என்ற இசைக்குழுவினருக்கு நான்கு தெருக் களுக்குட்பட்ட நகர வளாகத்தை கட்டி வைத்துள்ளனர். எப்படியாய் அந்தப் பெண் பிள்ளைகள் அங்கே சரீர அமைப்பினை காண்பிக்கும் இறுக்கமான அரைகுறை ஆடைகளோடும், அவர்கள் மேலே ஒன்றுமே அணியாமல் அவர்கள் மிகக் குறுக்கமுற்ற குளியல் ஆடை யான பிக்னி (அவர்கள் அதனை அவ்வாறு அழைக்கிறார்கள்) என்ற அதனை மேலே அணிகிறார்கள். ஓ, அது வெறுமனே கதம்பக்கூள ......... அவர்கள் தங்களுடையச் சிந்தையில் உள்ள எந்தக் காரியத்தையும் செய்கிறார்கள். அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், அதைத்தான் ...... ஏனென்றால் அவர்கள் பீட்னிக் என்ற இசைக்குழுவினைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். அவர்களால் அப்படியே எந்தக் காரியத்தையும் செய்ய - செய்ய முடியும். அவர்கள் அப்படியே படுத்துக்கொண்டு எழும்பாமலிருக் கின்றனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி செல்ல விரும்பினால், அவர்கள் அதைச் செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென்று விரும்பினால், அவர்கள் செய்கிறதில்லை. அதே சமயத்தில் அவர்களுடைய சிந்தை அப்படியே நிலையற்று பயணஞ்செய்கிறதாயுள்ளதே ! மனமாற்றமடையாத சிந்தைக்கு என்ன வருகிறது? உங்களுக்கு அதைச் செய்ய உரிமையே இல்லை, ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு சொந்தமான வர்களே அல்ல; நீங்கள் மாம்சமாக்கப்பட்ட தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையினால் கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்கள். ஆனால் பாவத்தினுடைய கதம்பக்கூளத்தைப் பாருங்கள்! ஏராளமான பெண்பிள்ளைகள் அந்தவிதமாக நிற்பதை நீங்கள் காண்கிறீர்கள்; ஏன்? எனக்கோ அது அந்தகார நேரத்தில் ஒளியாய் இருக்கிறது. அது ஒரு வளைந்து வளைந்து கவர்விட்டுச் செல்லும் மின்னலாய், வளைந்து வளைந்து செல்லும் தேவனுடைய சாட்டையாய், ஆகாயத்தில் வெளிச்சம் இருக்கக்கூடும் என்றும் காண்பிக்கும்படியானதாயுமிருக்கிறதே! பாவத்தின் மத்தியில் நீதி இருக்க முடியுமே! 44மரியாள், இயேசுவின் தாயார், நாசரேத்து பட்டணத்தில் அங்கே தேசத்தில் இருந்த மிக இழிவான பட்டணத்தில் இருந்தாள். ஆனால் அங்கிருந்தே தேவன் கம்முடைய குமாரனை பிறப்பிக்கும்படி தேவனுடைய வெகுமதிகள் எப்பொழுதுமே அவைகளுடைய ஸ்தானங்களைக் கண்டடைகின்றன 35 ஓர் அற்பமான பெண்மணியைத் தெரிந்து கொண்டார். அடைகாப்பு கருவியாய், ஒரு குழந்தைப் பிறக்க வேண்டியதற்கான ...... ஒரு கர்ப்பப்பை இருக்க வேண்டியதாயிருந்தது ......... அதைச் செய்ய அவர் அப்படிப்பட்ட ஒரு நபரைத் தெரிந்து கொண்டார். தேவன் மானிட வர்க்கத்தை மீட்கும்படியாக மானிட வர்க்கத்தினூடாகவே கிரியைச் செய்கிறார். உங்களுக்கு இருக்கிற எல்லாக் காரியத்தை யும் நீங்கள் முழுமையாக அர்ப்பணிப்பீர்களேயானால், அப்பொழுது அவரால் உங்களை எடுத்து மனித இனத்தை மீட்க உங்கள் மூலமாய் கிரியைச் செய்ய முடியும். நீங்கள் ஒரு வாலிபப் பெண்மணியாயிருந்தால், உங்களுடைய ஒழுக்க நெறிமுறைகளை அர்ப்பணஞ்செய்யுங்கள். நீங்கள் ஒரு வாலிப மனிதனாயிருந்தால், உங்களுடைய ஒழுக்க நெறிமுறைகளை அர்ப்பணஞ் செய்யுங்கள். உங்களுடைய சிந்தையை அர்ப்பணியுங்கள். உங்களுடைய யோசனையை அர்ப்பணி யுங்கள். உங்களுடைய இருதயத்தை அர்ப்பணியுங்கள். உங்க ளுடைய ஆத்துமாவை அர்ப்பணியுங்கள். கிறிஸ்துவானவர் அதனூடாக கிரியை செய்யட்டும். என்னே ஒரு மகிமையான காரியம்! சில ஆறுகளைக் கடக்க வேண்டும். நீங்கள் கடந்து செல்லும்படி பாலங்களைக் கடக்க வேண்டும். நீங்கள் மரத்தோப்பு களைக் கடக்க வேண்டும். நீங்கள் இருண்ட ஸ்தலங்களைக் கடக்க வேண்டும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றோ ஒரு நாள் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்க வேண்டியதாயிருக்கும். அப்பொழுது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைக் காண்பீர்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டே நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். உங்களுடையச் சிந்தையை, உங்களுடைய நினைவுகளை வடதுருவ நட்சத்திரத்தின் மேல் (தேவனுடைய மையம்) வைத்து, அதிலிருந்து அசையாதிருங்கள். அதனோடு சரியாக தரித்திருங்கள். அது வானசாஸ்திரிகளை நேராகக் கிறிஸ்துவண்டைக்குக் கொண்டு சென்றது போலவே, உங்களையும் கொண்டுச் செல்லும். 45சரி, வெள்ளைப்போளத்தால் அவரை அபிஷேகித்தார். யோவான் 12:1 முதல் 7 வரையில் உள்ள வசனங்களில், அதுதான் சரியாக அவருக்குச் செய்யப்பட்டது என்பதை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். அவர் தேவனுடைய பரிபூரணமான ஊழியக் காரராக இருந்தார். அவருடைய எல்லா தெய்வீக வரங்களினாலும் அவரை அபிஷேகித்திருந்தார். அவர் தேவனாயிருந்தபடியால், அவர் எல்லா தேவனுடைய வரங்களினாலும் அபிஷேகிக்கப்பட்டிருந்தார். அவர் தேவனாயிருந்தார். பாருங்கள். அவர்கள் அவருக்கு வெகுமதி களைக் கொண்டு வந்தனர். இப்பொழுது, நாம் ....... இருப்போம் ...... நான் விரும்புகிறேன் .... இங்குள்ள ஜனங்கள் எப்பொழுதுமே, அவர்களில் பெரும்பாலானோர், உங்களுக்கு ஏதோ ஒன்றை அனுப்புகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது அது திரும்பி அனுப்பும்படி அது திரும்பி வருகிறபோது, என்னால் அதைச் செய்ய முடிவதில்லை . புரிகின்றதா? அது உலகம் முழுவதும் உள்ளது. என்னால் அதைச் செய்ய முடியவில்லை, நான் ஒரு சிறிய ... சிறிய காரியங்களை, ஜனங்களை தங்களைத்தாமே வெளிப்படுத்திக் காண்பிக்கச் செய்கிற காரியங்களை, அவர்களுடைய நன்றி யுடைமை போன்றவற்றைப் பாராட்டுகிறேன். இப்பொழுது, இதைத்தான் இந்த ஐஸ்வரியமுள்ள மனிதர்கள் செய்திருந்தனர். இந்த மனிதர்கள் வான சாஸ்திரிகளாய் இருக்கின்றனர். அவர்கள் பொன்னை, சுத்தப் பொன்னைக் கொண்டு வந்தனர். அவர்களால் கண்டறிய முடிந்த மிகச் சிறந்த தூபவர்க்கத்தை அவர்கள் கொண்டு வந்தனர். அவர்களால் கண்டறிய முடிந்த மிகச் சிறந்த வெள்ளைப்போளத்தை அவர்கள் கொண்டு வந்தனர். 46நாம் இங்கே பரி. யோவான் 12 ல் அறிந்து கொள்கி றோம். நாம் இந்த ஸ்திரீ ... என்று நாம் கண்டறிகிறோம். அதை வாசிக்க நமக்கு நேரம் இருக்குமானால் நலமாயிருக்கும், ஆனால் நான் உங்களை மிக நீண்ட நேரம் காக்க வைக்க விரும்பவில்லை. பாருங்கள், ஏனென்றால் நாளையத் தினம் திங்கட்கிழமையா யிருக்கிறது என்பதை நான் அறிவேன், உங்களில் ........ உங்களில் சிலர் வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் கொண்டு வந்ததைப் ....... பாருங்கள் .... இந்த-இந்த ஸ்திரீ இந்த வெள்ளைப் போளத்தை. அதாவது மரணத்தின் வாசனையை எடுத்துப் போடும் படியாக மிக விலையுயர்ந்த அபிஷேகமான ஏதோ ஒரு காரியத் தைக் கொண்டு வந்தாள். அவள் இந்த வெண்சலவைக்கல்லைப் போன்ற பெட்டியை உடைத்து, அதை இயேசுவின் தலையின் மேல் ஊற்றினாள். யூதாஸோ, “ஏன்? இது தரித்திரருக்குக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமே” என்றான். (“அவன் தரித்திரருக்காக பட்சபாதம் கொண்டிருந்தான் என்பதனால் அல்ல, அவன் துவக்க முதல் ஒரு திருடனாயிருந்தபடியினாலும், அவன் பணத்தை சுமந்ததி னாலுமே இப்படிச் சொன்னான்.”) அவன், “இதைச் செய்வதற்குப் பதிலாக .... இது விற்கப்பட்டிருக்க வேண்டும்” என்றே கூறினான். இயேசுவோ, “இவளை விட்டுவிடு! ஏனென்றால் அவள் இதைச் செய்தாள் ......'' என்றார். அவரை அடக்கம் பண்ணுதலுக் கேதுவாக, அவள் அவரை அபிஷேகித்தாள். புரிகின்றதா? இந்த ஸ்திரீ தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்கு அவ்வளவு நன்றியுள்ள வளாயிருந்தாள். அவள் தான் வைத்திருந்த அவளுடைய எல்லா பணத்தையும் செலவழித்து, வெண்சலவைக் கல்லைப் போன்ற பெட்டியை எடுத்து வந்து, அதை உடைத்து, எண்ணெயை ஊற்றி, இந்த அருமையான வெள்ளைப்போள வாசனையினால் அந்த அறையை நறுமணம் கமழச் செய்தாள். அதாவது அவருடைய மரணத்திற்கேதுவாக அவரை அபிஷேகித் திருந்தாள். இப்பொழுது பாருங்கள், அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதனை அறியாமலேயே, அவள் அந்தப் பணிவிடையைச் செய்தாள். ஆனால் அவள் தேவனுக்கு அவ்வளவு நன்றியுள்ளவளாயிருந்தாள். 47நீங்கள் கிறிஸ்துமஸுக்காக அவ்வளவு நன்றியுள்ளவர் களாக இருப்பீர்களாயின், அது, “நான்-நான் ஜோன்ஸ்க்கு ஒரு வெகுமதியை அளிக்கிறேன். அவர்கள் எனக்கு ஒன்றைத் திரும்ப அளிப்பார்கள். நான் என்ன பெற்றுக்கொண்டேன் என்பதை காலையில் பார்ப்பேன்'' என்று கூறுவதல்ல. நீங்கள், ஏன், உங்களுடைய இருதயத்தைத் திறந்து, அங்கே உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து, இங்கே உள்ளே நீங்கள் என்ன பெற்றிருக்கிறீர்கள் என்று கண்டறியக்கூடாது? ஏற்றுக் கொள்ளுங்கள் ....... நாம் அது வெறுமையாய், கற்பனைத்திறனுக் குரிய கொள்கைகளோடும், உலகக்கவலைகளோடும் இருப்பதைக் கண்டால், இன்றிரவே, அதை நிரப்பும்படி ஏன் கிறிஸ்துவைக் கேட்டுக் கொள்ளக்கூடாது? இன்றிரவு அதனால் நீங்கள் உண்மை யானக் கிறிஸ்துமஸின் பொருளைப் புரிந்து கொள்ள முடியும். அது - அது கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதாகும்; தேவன் மானிட இருதயத்தில் வாசம் செய்தல். அதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் என்பதைக் குறித்த பொருள்படுதலாகும். ஆனால், நீங்கள் பாருங்கள், நாம் இன்றைக்கு அவ்வளவு எதிர்மறையாக மாறிவிட்டோம். அதுவோ பிசாசு நம்மிடத்தில் (வண்ணந்தீட்டப்பட்ட மிட்டாய் குச்சுகள், ஒரு பனிச் சறுக்கு வண்டி கலைமான், கன்னத்தில் கிருதா முடிக்கற்றையைக் கொண்ட ஒரு மனிதன், ஒரு ஆகாயவிமானத்தைப் போன்று ஆகாயத்தினூடாக பறந்து, முழு உலகத்தையும் விஜயம் செய்து, தன்னுடைய முதுகின் மேல் ஒரு சிறிய சிப்ப விளையாட்டுப் பொம்மைகளோடு ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு பிள்ளை யினிடத்திற்கும் விஜயம் செய்வது) என்ற முறையில் அணுகிக் கொண்டிருக்கிறதாயுள்ளது. அது- அது வெறுமனே ஒரு பொய்யா யிருக்கிறதே! அது முழுமையான ஒரு பொய்யாயிருக்கிறது. புரிகின்றதா? இப்பொழுது புரிகின்றதா? ஆனால் ஏன்? ஜனங்களுடைய மனதினை திரிக்கும்படியாகவேப் பிசாசு அதைச் செய்துவிட்டான். 48வர்த்தக உலகமானது அதற்குள் நுழைந்துவிட்டது. அவர்கள் ......... ஏன், அவர்கள் ஏறக்குறைய வருடம் முழுவதுமே ஓய்வாயிருக்குமளவிற்கு கிறிஸ்துமஸ் நேரத்தினூடாக போது மானதைச் சம்பாதிக்கின்றனர். அன்றொரு நாள் நான் ஒரு வர்த்தகரிடம் பேசினேன். அப்பொழுது அவர், “நீங்கள் எனக்கு இரண்டு வாரம் மாத்திரம் அவகாசம் கொடுங்கள், நான் என்னுடைய வாடிக்கையாளர் கூட்டத்தை இங்கே தக்கவைத்துக் கொள்ளாமலிருந்தாலும்”, என்று கூறிவிட்டு, “நான் அடுத்த கிறிஸ்துமஸ் வரையிலும் காத்திருப்பேன்; நான் மீன் பிடிக்கச் செல்லக்கூடும். அடுத்த கிறிஸ்துமஸ் வரையில் நான் செய்யவிரும்பு கிறதையெல்லாம் செய்வேன்” என்றார். அவர் தொடர்ந்து, “ஆனாலும் நான் பையன்கள் கொள்முதல் செய்யாமல் சென்று விடாதபடிக்கு தக்க வைத்துக் கொள்வேன்” என்றும் கூறினார். மேலும், “என்னுடைய கரங்களிலிருந்து செலவு செய்தவைகளையும், மற்றக் காரியங்களையும், தொடர்ந்து போதுமான அளவு சம்பாதிக்கும்படி என்னுடைய வியாபாரத்தைத் தொடர்ந்து ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து நடத்துவேன்'' என்றார். பின்னும், ”நான் கிறிஸ்துமஸ் நேரம் வரும் வரையிலும் ஒன்றுமே சம்பாதிப்பதில்லை' என்றும் கூறினார். நீங்கள் பாருங்கள், அது ஓர் ஆராதனை; ஓர் ஆராதனையாயிருக்க வேண்டியதாயிருக்கும் போது, அது ஒரு பெரிய வர்த்தக சம்பந்தமான காரியமாக மாறிவிட்டிருக்கிறது. 49இப்பொழுது தேவன், இயேசுவை அவ்வள வாய் தம்முடையப் பரிபூரணத்தினால் அபிஷேகித்தார் ......... அவர் உலகத்திற்கு தேவனுடைய வெகுமதியாயிருந்தார். அந்த வான சாஸ்திரிகள் தெளிவாக அடையாளங்கண்டு கொள்ளப்பட்டனர். அதாவது அவர்கள் தங்களுடைய வெகுமதிகளை அவருக்கு அளித்துக் கொண்டிருந்தனர்; அவர்களுடைய இருதயங்களில் அவர் என்னவாயிருந்தார் என்றும், அவர்களுக்காக என்ன செய்யப் போவதாயிருந்தார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பதையே அது காண்பித்தது. ஆகையால் அவர்கள் செய்த முதல் காரியம், அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து, பரிபூரணமான ஒழுங்கு முறையில் அவரைப் பணிந்து கொண்டனர் என்பதில் வியப்பொன்றுமில்லையே. அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடிந்ததற்கு முன்னமே, அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரைப் பணிந்து கொண்டு, அதன் பின்னரே தங்களுடைய வெகுமதிகளை அளித்தனர். அந்தவிதமாகத்தான் உண்மையான கிறிஸ்துமஸ் இருக்க வேண்டும். அவரைப் பணிந்து கொண்டு, பின்னர் உங்களுடைய வெகுமதியை அளியுங்கள்; உங்கள் சரீரத்தைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள். ஆனால் வான சாஸ்திரிகள் அதைச் செய்த பிறகு, என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்துவின் தகப்பனும், தாயும் ......... அணைத்தாதரித்து வளர உதவின தகப்பானர் (உண்மையாகவே) மற்றும் தாயாரும்கூட, ஏனென்றால் தேவனே அவருடைய தகப்பனும் தாயுமாயிருந்தார். ஆனால் அவர்கள் இந்த வானசாஸ்திரிகளிடத்திலிருந்து இந்த வெகுமதி களை ஏற்றுக்கொண்டனர் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்கள் ஞானமுள்ள மனிதர் என்று அழைக்கப்பட்டிருந்ததில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் ஞானவான்களாய் இருந்தனர். அவர்கள் உண்மையாகவே .......... ஞானமுடையவர்களாயிருந்தனர். மனிதனோ இன்றைக்கு அந்த ஞானத்தை உடையவனாயிருந்தால், அதைப் போன்ற ஞானத்தையுடையவராயிருந்தால் நலமாயிருக்குமே! ஒரு ஞானமுள்ள மனிதனே கிறிஸ்துவினிடத்திற்கு வரும்படி யாகிறது. அவரைப் புறக்கணிக்கிற ஒரு மனிதன் ஞானமற்ற ஒரு மனிதனாயிருக்கிறான். ஆனால் ஒரு ஞானமுள்ள மனிதனே கிறிஸ்துவினிடத்திற்கு வரும்படியாகிறது. 50இப்பொழுது கவனியுங்கள்! வானசாஸ்திரிகள் அவர் என்னவாயிருப்பார் என்று அவரை அடையாளங்காட்டினப் பிறகு, அவர் பன்னவாயிருந்தார் என்பதை சரியாக வேதவாக்கியத்தினூடாக நாம் கண்டறிகிறோம். மரணத்திற்கான ஊழியத்தில் தெய்வீகத்தன்மை. என்னத்திற்காக? மரணத்திற்காக தேவனுக் கென புரியும் பணியில் தெய்வீகத்தன்மை. இயேசு உலகத்தை மீட்கும்படியாக மரணத்திற்கானப் பணியில் தெய்வீகத்தன்மை யாயிருந்தார். ஆனால் உலகம் அதற்கு என்ன செய்தது? அவர்கள் அதை மறுத்துவிட்டனர். அவர்கள் அதைப் புறக்கணித்தனர். ஏன்? அவர்களில் சிலர், அவர்கள் ஒரு பெரிய பங்காயிருந்து, அவர் மரித்துவிட்டாரே என்ற காரணத்தால், இந்தக் காரணத்தால் அதைச் செய்தனர். அவர்கள், “அவர் தெய்வீகத்தன்மையாயிருந்து மரித்திருக்க முடியாது” என்றனர். மனித (சரீரம்) தெய்வீகத்தன்மை யாயிருக்கவில்லை, ஆனால் தெய்வீகத்தன்மை சரீரத்திற்குள் இருந்தது. இந்தச் சரீரம் அழிந்து போக வேண்டியதாயிருக்கிறது. உங்களுக்குள் இருக்கிற அதே கிறிஸ்துவானவரே உங்களை எழுப்பக்கூடிய ஒரே காரியமாய் இருக்கிறார். அதுவே தெய்வீகத் தன்மையாய், தேவன் உங்களுக்குள் இருப்பதாயுள்ளது. 51இப்பொழுது கவனியுங்கள்! இப்பொழுதும். இப்பொழுதும் அதேவிதமாகவே அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளப்பட்ட தெய்வீகத்தன்மையைப் புறக்கணிக்கிறார்கள். நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுடையப் பெயரை நிச்சய மாகவே ஒரு சபை புத்தகத்தில் எழுதி, ''நான் இந்தக் கோட் பாட்டினைக் கொண்டு வாழ முயற்சிப்பேன்“ என்று கூறுவார்கள். அவர்கள் இதனைக் கொண்டு ஆணையிட்டுக் கொள்வார்கள். ஆனால் அது தெய்வீகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும்படியாக வரும் போது ...... முன்னர் வெளிப்படையாக அவர்கள் செய்தது போன்றே ......... அதே விதமான ஒரு வெகுமதியை ........ அதாவது நீங்கள் வெகுமதியினால் அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றீர்கள். அதாவது நீங்கள் அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட தெய்வீகத் தன்மைக்கு, அதற்கு உங்களுடைய முழு சரீரத்தையும் நீங்கள் அளிக்க வேண்டும். நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ, உங்களுக் குள்ள எல்லாவற்றையும் அளிப்பதன் மூலமே, அப்பொழுதே தெய்வீகத்தன்மையோடு உங்களையே நீங்கள் தெய்வீகத்தன்மையான அவருக்கு அடையாளங்காட்டுகிறீர்கள். இப்பொழுது, இந்நாளில் கிறிஸ்து, அதாவது இப்பொழுது நாம் ஜீவிக்கிற நாளில் இன்னமும் ஒரு தெய்வீக ......... தம்மை அடையாளங்காட்டுகிறார். ஜனங்களுக்கு மத்தியில் தெய்வீகத் தன்மை, அவர் இன்னமும் தெய்வீகத்தன்மையாயிருக்கிறார். ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தைதாமே ஜீவிப்பதை நாம் காணும்போது, அப்பொழுது மனிதனால் அதைச் செய்யமுடியாது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். அது தெய்வீகத்தன்மையாய், வார்த்தை மனிதனின் மூலம் வெளிப் படுத்தப்படுகின்றதாயுமிருக்கிறது. இயேசுதாமே, குமாரன் தாமாய் ஒன்றையும் செய்ய மாட்டார். என்னால் ஒன்றையும் செய்ய முடியாது. நான் ஒரு மனிதனாயிருக்கிறேன் என்று கூறினார். இயேசு, “ஆனால் எனக்குள் வாசமாயிருக்கிற பிதா , அவர் தாமே செய்கிற எல்லாக் காரியங்களையும் எனக்கு காண்பிக்கிறார்'' என்றார். ஆமென்! அங்குதான் காரியம்! அது என்ன? தெய்வீகத் தன்மை மனிதனுக்குள் அடையாளங்காட்டப்பட்டுக் கொண்டிருத்த லாகும். இப்பொழுது இன்றைக்கும் அதேக் காரியமாய் உள்ளது; அதாவது தெய்வீகத்தன்மையானது, இந்நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானதுதாமே உங்களுக் குள்ளாக அடையாளங் காட்டமுடியும். ஆமென்! அப்படியானால் உங்களால் அதனைப் பற்றிக் கொள்ளமுடியுமா? அப்பொழுது நீங்கள் அதில் விசுவாசங் கொண்டிருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. தேவனுடைய தெய்வீகத்தன்மைக்கு அதைக் கொடுங்கள்; அதை விசுவாசியுங்கள், பணிவிடை செய்யுங்கள், நீங்களும் உங்களுடைய சொந்த சிந்தனைகளும் மரிக்கும்படி ஆயத்தமாயிருங்கள். ஆனால் அப்பொழுது அது இருந்தது போலவே இன்றைக்கும் அது புறக்கணிக்கப்படுகிறது. 52கவனியுங்கள், தேவன் வானசாஸ்திரிகளை அவர் களுடைய வெகுமதிகளோடு வழிநடத்தினார். உண்மையாகவே இரண்டு வருடங்களாக அவர்கள் அந்த நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்றனர். புரிகின்றதா? அது சம்பவித்த இயற்கை யான காரியங்களில் ஒன்றாய் இருக்க முடியாது என்பதையே காண்பிக்கிறது .புரிகின்றதா? ஏனென்றால் நட்சத்திரங்கள் தங்களுடையக் கோளப்பாதைகளை கடந்திருக்குமேயானால், அப்பொழுது அது வித்தியாசமாக ஏதோ ஒரு காரியம் இருந்தது என்பதைக் காண்பிக்கும். ஏனென்றால் ...... அந்த வான சாஸ்திரிகள் அதைக் கண்டிருந்தாலொழிய ...... அது சம்பவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, அவைகள் அந்த வழியாய் கடந்து செல்ல வேண்டியிருந்ததை அறிந்திருந்தனர். பாருங்கள், அந்த பாதைகளில் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த வானொளிக் கோளங்கள் அந்த வழியில் அசைந்து கொண்டிருந்ததை முன்னதாகவே அறிந்து, அங்கிருந்து புறப்பட்டு அந்த நேரத்தில் பெத்லகேமிற்குக் கடந்து சென்றனர். இப்பொழுது, வானசாஸ்திரிகள் சரியான வெகுமதி களை உடையவர்களாயிருந்த காரணத்தால் தேவன் அவர்களை வழிநடத்தினார். இந்த வானசாஸ்திரிகள் அவருடைய குமாரனை அடையாளங்காட்டும்படியான சரியான அடையாளங்கண்டுகொள்ளப் பட்ட வெகுமதிகளை உடையவர்களாயிருந்த காரணத்தால், தேவன் அவர்களை வழிநடத்தினார். ஓ ஓ ஓ ஓ ஓ, என்னே ! நீங்கள் இதைப் புரிந்து கொள்ளுகிறீர்களா? இன்றைக்கு ஞானமுள்ள மனிதன், கர்த்தருடைய நாமத்தில் ஞானம், கற்பனையான ஏதோ ஒரு காரியத்தினால் அல்ல, ஆனால் இந்த நாளுக்கென தேவன் வாக்களித்துள்ள வரத்தினால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அடையாளங்கண்டு கொள்ளும்படியாய் தேவன் உங்களை வழிநடத்துவார். அங்குதான் காரியம் ! ஞானமுள்ள மனிதன்! 53அவைகள் அவரை அடையாளங்காட்டும்படியான வெகு மதிகளாயிருந்தபடியால் தேவன் அந்த வெகுமதிகளை வழிநடத் தினார். இன்றைக்கு ஞானமுள்ள மனிதனால் சபை ஸ்தாபனத் திலிருந்தும், உலகத்தின் எல்லாக் காரியங்களிலிருந்தும் பிரிந்து ஜீவிக்கின்ற தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்க்க முடியுமே! தேவன் தம்முடைய குமாரனை தம்முடைய வார்த்தையினால் அடையாளங்காட்டுவார். ஏனென்றால், அந்தவிதமாகத்தான் அவர் இருக்கிறார். ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்“. ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்”. இன்றைக்கும் அதே வார்த்தையாய், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஒரு ஞானமுள்ள மனிதன் அதைப் பின்பற்றுகிறான், ஏனென்றால் தேவன் அதன் மூலம் தம்மை அடையாளங்காட்டும்படிக்குக் கவனமாயிருக்கிறார். ஆமென்! ஒரு வெகுமதியாயிற்றே! தேவனுடைய அடையாளங் கண்டுகொள்ளப்பட்ட ஓர் உண்மையான வெகுமதி. தேவன் தம்மைத்தாமே அதன் மூலம் அடையாளங்காட்டும்படியாக அதைப் போன்ற ஒரு காரியத்தையே பூமிக்குக் கொண்டு வருகிறார். அந்தவிதமாகத்தான் கிறிஸ்து அடையாளங்கண்டு கொள்ளப்பட்டார்; பொன்னினாலும், வெள்ளைப் போளத்தினாலும், தூபவர்க்கத்தினாலுமே, அவைகளின் மூலமே மனிதனுக்கு முன் நிழலாகவும், அவருடைய ஜீவியம் என்னவாயிருக்க வேண்டியதா யிருந்தது என்ற மாதிரி காண்பிக்கப்படுகிறது. புரிகின்றதா? அவர் ஜாதிகளை மீட்கும்படிக்கு மரிக்கும்படியான பணிக்காகவே தெய்வத்துவம் வெளிப்பட்டது. ஏனென்றால் அவர் “தம்முடைய ஜனங்களை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்க வேண்டிய வராயிருந்தார்”. உலகத்தை இரட்சிக்க வேண்டியவராயல்ல, அவருடைய ஜனங்களைத் தங்களுடையப் பாவத்திலிருந்து இரட்சிக்க வேண்டியவராயிருந்தார். இங்கே வேதமோ, ''அவருடைய நாமத்தின் மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்“ என்று உரைத்துள்ளது. ஆமென்! வேறு வார்த்தைகளில் கூறினால், மணவாட்டி, புறஜாதியாரிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் நம்பிக்கையாயிருந்து கொண்டிருப் பார்கள், ”அவருடைய நாமத்தில் புறஜாதியார் நம்பிக்கையாயிருப் பார்கள்''. இப்பொழுது, தேவன் அவர்களை வழிநடத்தினார். ஏனென்றால் அவர்கள் ......... அவர்கள் அளித்துக் கொண்டிருந்த வெகுமதிகளே அந்த நேரத்திற்கு பொருத்தமாயிருந்து கொண்டிருந்தன. 54கவனியுங்கள்! நான் கூறியிருக்கிறதுபோல, தேவன் ...... அவர் - அவர் ஆதியாகமத்தில் தம்முடைய வார்த்தையை ஆதியில் பகிர்ந்தளித்தார். என்னால் ஆதியாகமத்தை எடுத்து வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு காலத்தையும், இங்கே இந்தக் காலம் வரையிலும் உங்களுக்குக் காண்பிக்க முடியும். நாம் இன்றைக்கு பெற்றுள்ள எல்லா வழிபாட்டு முறைகளையும் மற்று முள்ள காரியங்களையும் ஆதியாகமத்தில் அவைகள் சரியாக எங்கேயிருந்தன என்பதை என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும். புரிகின்றதா? தேவன் தம்முடைய வார்த்தையை இங்கே இவ்வளவு என்ற அளவில், இங்கே இவ்வளவு என்ற அளவில், இங்கே இவ்வளவு என்ற அளவில் ஒவ்வொரு காலத்திற்காகவும் அளித்தார். அதன் பின்னர் அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி, அந்த வார்த்தையை நிறைவேற்றும்படி செய்ய அபிஷேகித்தார். அது வந்து கொண்டிருந்த மற்ற ஒருவரை ஆதரிக்கிறது. பாருங்கள், மேசியாவைப் போலவே எப்பொழுதுமே ஆதரித்தது. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தன்னுடைய சொந்த ஜீவியத்தில் அந்த நாளுக்காக கொடுக்கப்பட்ட வார்த்தையை அவனுடைய சொந்த ஜீவியத்தில் கொண்டிருக்கையில், அவன் வந்து, அந்த எழுதப்பட்ட வார்த்தையை நிறைவேற்றி, மற்ற ஒருவர் என்னவாயிருக்கப் போவதா யிருப்பார் என்று முன்னுரைத்தார். அவர்கள் ஒவ்வொருவருமே அவரைக் குறித்து உரைத்தனர் (ஆமென்) ஏனென்றால் அவர் பரிபூரணமானவராயிருந்தார். அவர் தீர்க்கதரிசிகளின் தலைவராய் இருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் தீர்க்கதரிசிகளாயிருந்தார். ஆமென்! அவ்வாறே அவர் இருக்கிறார். கவனியுங்களேன்! அந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியிலும் அவர் எவ்வளவு அற்புதமானவராயிருந்தார். 55அதன் பின்னர் அவர் வந்தபோது, அவர் தீர்க்கதரிசி களின் பரிபூரணமாயிருந்து வெளிப்பட்டார்; ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையாயிருந்தனர். அவர்தாமே, “தேவனுடைய வார்த்தை அவர்களண்டை வருகின்றபடியால், நீங்கள் அவர்களைத் தேவர்கள் என்று அழைப்பீர்களேயானால், நான், 'தேவனுடைய குமாரன்' என்று கூறும்போது நீங்கள் எப்படி என்னை ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கமுடியும்?” என்றார். பாருங்கள், அவர்கள் அந்தக் காலத்திலேயுங்கூட தேவர்களாக அடையாளங்கண்டு கொள்ளப் பட்டிருக்க, தேவன் தாமே “தேவர்கள்” என்றே அழைக்கிறாரே. அவர்கள் என்னவாயிருந்தனர்? அவர்கள் அவருடைய வார்த்தை யின் வெளிப்படுத்துதல்களாய் இருந்தனர். இங்கோ அவர் வார்த்தையின் பரிபூரணமாய், தெய்வீகத் தன்மைக்கு உடலுருவங் கொடுத்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தெய்வீகத்தன்மையிருந்தார். 56கவனியுங்கள்! இந்த வெகுமதிகளை, அதாவது இந்த மனிதர்கள் கொண்டு வந்தனர். அவர்களால் அதை ஒரு தீர்க்க தரிசிக்கு கொண்டு வந்திருக்க முடியாது. அது சரியாயிருந்திருக் காது. புரிகின்றதா? அந்த வெகுமதிகள் எலியாவண்டைச் சென்ற டைந்திருக்க முடியாது. அவைகள் மோசேயினண்டைக்கு சென் றடைந்திருக்க முடியாது, அவைகள் அவரண்டை வரவேண்டிய தாயிருந்தது. அந்த வெகுமதிகள் கண்டிப்பாகவே அந்த நாளுக் கானதாகவே இருந்தன என்பதையே பொருட்படுத்தி, இந்த வெகு மதிகளின் மூலம் அவர் யாராயிருந்தார் என்பதை அடையாளங் காட்டும்படியாயிருந்தது. அப்பொழுது இங்கே தேவன் கூடவே வந்து அவரைப் பாதுகாத்தார். அவர்கள் பரிபூரண ஒளியினைக் கண்டடையும் வரைக்கும் அங்கே இரண்டு வருடங்களாக அவர்களைக் காத்துக் கொண்டார். என்னே பொருத்தம்! இன்றைக்கும் அதே காரியம். நாம் உண்மையான, அருமையான ஜனங்களை, அசலான ஜனங்களைப் பெற்றுள்ளோம். ஆனால் நீங்கள் பாருங்கள், அதில் வெளிவரப்போகிற ஏதோ ஒரு காரியம் இருக்கப்போகிறது. அதாவது தேவன் எப்பொழுதுமே, இந்த நாளிலும் அடையாளங்காட்டும்படிக்கு செய்துள்ளார். இந்தக் காரியங்கள் சம்பவிக்கும்படி உரைக்கப்பட்டிருப்பது இந்நாளேயாகும். அநேகர் அல்ல, வெகு , வெகு சிலரே இரட்சிக்கப்படுவர். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. அது வெறுமனே ஒரு கைப்பிடி யளவாய் இருக்கும். 57இயேசுவானவர்தாமே, “அது நோவாவின் நாட்களில் இருந்தது போன்றே, அதில் எட்டு ஆத்துமாக்கள் இரட்சிக்கப் பட்டிருந்தனர்'' என்றார். இதைப்போன்றொத்த ஒரு சந்ததியி லிருந்து-எட்டு ஆத்துமாக்கள். ”அது நோவாவின் நாட்களில் இருந்தது போலவே“. அது என்னவாயிருந்தது? மகத்தான, நாகரீகப்பண்பினைக் கொண்ட ஜனங்கள், மகத்தான பணியாளர் கள், மகத்தான கட்டிடப்பணியாளர்களை அவர்கள் கொண்டிருந்தது போன்றே ஒவ்வொரு காரியமும் மகத்தானதாயுள்ளது. அவர்கள் கொண்டிருந்த மகத்தான காரியங்கள், அதைப்போன்றே இந்த நாகரீகமும் ஆகிவிட்டது. ”நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' புரிகின்றதா? தேவன் தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை அடையாளங்காட்ட நோவாவை உடையவராயிருந் தார். அது மிகவும் பொருத்தமாயிருந்தது. அதாவது, “அவர் மனுஷனை நிக்கிரகம்பண்ணுவார்” என்று அவன் உரைத்த தேவனுடைய வார்த்தைக்கு பேழையானது ஏற்றதாயிருந்தது. ஆனால் அவனால் முடிந்ததை அவன் காப்பாற்றினான். 58இப்பொழுது, இந்த வானசாஸ்திரிகள் தங்களுடைய வெகுமதிகளைக் கொண்டு வந்து அடையாளங்காட்டினர். அது என்னவாயிருந்தது என்பதை அவர்களுடைய வெகுமதிகள் அடையாளங்காட்டின. அந்தக் காரணத்தினால்தான் தேவன் அந்த வெகுமதிகளை அவர்கள் புறப்பட்டுவந்த ஒவ்வொரு அசைவி னூடாகவும் பாதுகாத்தார். அவர்கள் அந்த வெகுமதிகளோடு வந்தடையும் வரையில் அவர் அவைகளைப் பாதுகாத்தார். ஏனென்றால் அவைகள் அந்த நேரத்திற்காகவே பொருத்தமாயிருந்து கொண்டிருந்தன. என்னுடைய சபை அதைப் புரிந்து கொள்ளுகிறதா? இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறதே ! அது உங்களுடைய தலைக்கு மேல் சென்றுவிடாது என்றே நான் நம்புகிறேன். நான் அதை ஏறக்குறைய உவமையில் கூறவேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பாருங்கள். ஆனால் நீங்கள் காண்கிறீர்களா? சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களோ இந்நாளுக்கு, லவோதிக்கேயா விற்கே பொருத்தமாயிருந்து கொண்டிருக்கின்றன. இது பொருந்தும் நேரமாயிருக்கிறது. அந்தக் காரணத்தினால் தான் தேவன் அதனைப் பாதுகாத்திருக்கிறார். பாருங்கள், அது அவரைத்தாமே அடையாளங்காட்டும்படியாக கொண்டுவரப்பட்டது. வெகுமதிகள், அது ஒரு மரணத்தை கிரயமாக்கியிருந்தாலும், அது அவர்களுடைய வழியில் ஒரு முட்டுக்கட்டையை வைத்தது. இது ஓர் ஏற்ற சமயமாய் உள்ளது. அது உண்மை , அது இந்நாளுக்கான பொருத்த மாயிருந்தது. அந்தக் காரணத்தினால் தான் தேவன், அவர் கொண்டுள்ள வழியில் அதைப் பாதுகாத்திருக்கிறார், அவருடைய தீர்மானம் பணியாற்றி நிறைவேற்றப்படுகின்ற வரையிலும், அவர் அதைப் பாதுகாப்பார். 59ஓ, அந்த நோக்கத்தின் பேரிலான ஒரு காரியத்தைக் குறித்து அண்மையில் நான் வாசித்த ஒரு கதை என் நினைவிற்கு வருகிறது. இங்கே இந்த தேசத்தில் ........ நியூயார்க்கில் ....... ஒரு பெரிய பட்டணம் இருந்து வந்தது. அது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின மாலைப்பொழுதாயிருந்தது. அங்கே ஓர் ஏழ்மையான குடும்பம் இருந்து வந்தது. ஓர் அற்பமான, அவலநிலையிலான அவர் எலும்புருக்கி நோயுடையவராயிருந்தார். அவர் ........ அவருடைய மனைவிக்கும் எலும்புருக்கி நோய் இருந்தது. எனவே அவர்கள் சமுதாயத்தில் கீழ்த்தரமான அடிவகுப்பு நிலையில் இருந்து வந்தனர். அவர்-அவர் ஒருவிதமான ....... அவர் பெலவீனமா யிருந்தார். எனவே எவருமே அவரைக் கூலி வேலைக்கும் அமர்த்திக் கொள்ள மனதில்லாதிருந்தனர். அவர் கல்வி யறிவில்லாதவராயிருந்தார். அவரை- அவரை ........ ஜனங்களுக்கோ அவர் தேவைப் படவில்லை . அவர் நாதியற்று தள்ளி வைக்கப்பட்டவராய், வேலை தேடிச் சுற்றித்திரியும் நாடோடியானார். வெறுமனே ..... வேலை தேடிச் சுற்றித்திரியும் நாடோடி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் வெறுமனே சென்று, ஏதோ ஒன்றைத் தேடிக் கண்டு பிடித்து, அதைச் சுற்றித்திரிந்து விற்பனை செய்து உங்களால் முடிந்ததை சம்பாதிப்பதாகும். அவர்கள் அதன் பேரிலான அந்த சிறு விற்பனை இலாபத் தொகையினை சம்பாதித்து, அதனைக் கொண்டே வாழ முயல்கின்றனர். அப்படியே ஒரு ........ சுற்றித் திரிந்து விற்பனை செய்யும் ஒருவரைப் போன்று அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றை வீதியில் செய்பவர்; போய் சில குண்டூசிகள், ஊசிகள் மற்றும் விரல் குப்பிகள் போன்றவற்றை, அவர்களால் என்னவெல்லாம் முடியுமோ அதை வாங்குதல். அதனை எடுத்துக் கொண்டு, ஒருக்கால் ஒரு பையை ஒரு நாணயத்திற்கு வாங்கி, அவைகளை ஒரு நிக்கல் நாணயத்திற்கு விற்றல்; அந்த ஒரு பையின் பேரில் சற்றுக் கூடுதலாக நான்கு சென்டு நாணயங்களைச் சம்பாதித்து, ஒரு நாளின் பொழுதினை நடத்துவதாயிருக்கலாம். நீங்களோ, “அது-அது ஒரு பெரிய இலாப மாயிருக்கிறது'' எனலாம். ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள், அவன் எல்லாவற்றையும் ஒரு நாளில் விற்க வேண்டும். அவன் ஒருக்கால் இருபது, முப்பது சென்டு நாணயங்களை ஒரு நாளில் சம்பாதிக்கலாம். அவனுக்கோ ஒரு குடும்பம் இருந்தது. 60அந்த அவல நிலையிலிருந்த மனைவியோ பெலவீன மடைந்து, அவள் - அவள் மரித்தேப் போயிருந்தாள், அதுவோ கிறிஸ்துமஸ் வந்து கொண்டிருந்த நேரமா யிருந்தது. அந்தச் சிறுபெண், அவளும் போதா ஊட்டச்சத்து உணவின் காரணமாக, சரியான உணவில்லாமையினாலும், மற்றக் காரியத்தினாலும் ....... நோய் முற்றக்கூடியவளாயிருந்தாள். அவளுக்கும் கூட எலும்புருக்கி நோய் வந்துவிட்டது. அவள் ஒரு குட்டி நபராய், சுமார் எட்டு, ஒன்பது, பத்து வயதுடையவளா யிருந்தாள். அவள் கிறிஸ்துமஸிற்காக ஒருபோதும் ஒரு பொம்மையை உடையவளாயிருந்ததேயில்லை. அதனால்தான் அவள் ஒரு வெகுமதியாக விரும்பினதோ ஒரு பொம்மையாயிருந்தது. தகப்பனோ அவளுடைய மருத்துவ கண்காணிப்பிற்கே பணமளிக்க முடியாதவனாயிருந்தான். அவன் - அவன் இந்தச் சிறு பெண் துரிதமாக வியாதியில் முற்றிக்கொண்டிருப்பதையும் கண்டான். ஆயினும் அவன் தன்னால் இயன்றமட்டும் முயன்று போதிய பணத்தினை சம்பாதித்துக் கிறிஸ்துமஸிற்காக ஒரு பொம்மையை வாங்க முயன்றான்; அவனால் அவளுக்கு ஒரு சிறு பொம்மையை வாங்கித் தருமளவிற்குப் போதுமானவற்றைச் சம்பாதிக்க முடிந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! கிறிஸ்துமஸ் நேரமோ வந்து கொண்டிருக்க, மோசமான வானிலை நிலவ, சிறு பெண்ணோ ஒருவிதமான சீதள சன்னிக்கொண்ட சளிக்காய்ச்சலால் முற்றிப்போன நிலையை அடைந்துவிட்டாள்; என்னே, கிறிஸ்து மஸிற்கு முன்னர் வெறுமனே ஒரு சில வாரங்களில் இப்படியாயிற்றே. தகப்பனோ உண்மையாகவே, இருதயம் நொறுங்குண்டவனாய், அவன் தன்னுடைய சிறு தகரப்பெட்டியண்டைச் சென்று, சேமித் திருந்த பணத்தை வெளியே கொட்டினான். அவன் தன்னுடைய சிறுபெண்ணைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலானான். அவள் சிறு பெண் பிள்ளைகளைப் போன்றே ஒரு - ஒரு பொம்மையை விரும்பியிருந்தாள். பாருங்கள், அதுவோ ஒரு சிறிய தாயாக வளர்ந்து உருவாகிக் கொண்டு வருகிறாள் என்பதாய் உள்ளது. 61எப்படியாய் ஒரு சிறுபெண், அவள் ஒரு பொம்மை யண்டை நாடிச் செல்கிறாள் என்பதை நீங்கள் கவனியுங்கள், ஏனென்றால் அவள் ........ அது அவளுடைய சுபாவமாயிருக்கிறது. அவள் ஒரு - அவள் ஒரு தாயாக வளர்ந்து உருவாகிக் கொண்டிருக் கிறாள். அவள் உயிரோடிருப்பாளேயானால், ஒவ்வொரு காரியமும் சரியாயிருந்தால், என்றோ ஒரு நாள் அவள் தாயாயிருப்பாள். அவளுடைய சுபாவத்தை நீங்கள் அறிவீர்கள். அந்தக் காரணத் தினால்தான் ஒரு சிறு பெண் ஒரு சிறு பொம்மையை விரும்புகிறாள். அவள் அதைப் பத்திரமாய் வைத்துக் கொள்ள விரும்புகிறாள்; ஏனென்றால் எப்படியிருந்தாலும், அவள் - அவள் இயல்பாகவே ஒரு சிறிய, ஒரு சிறிய தாயாயிருக்கிறாள். அவள் ஒரு சிறு பொம்மையை விரும்பினாள். ஏனென்றால் அவள் ஒருபோதும் ஒன்றையும் வைத்திருந்ததே யில்லை. தகப்பனாரோ அவளுக்கு ஒரு சிறு பொம்மையை வாங்கித்தரும்படித் தன்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவளோ மரித்தேப் போய் விட்டாள். எனவே தகப்பனாரோ ஒரு விதமான நினைவிழப்புக் கொண்ட சிந்தையினை உடையவனாயிருந்தான். அவனுடைய மனைவியும் எடுக்கப்பட்டிருந்தாள், அவனுடைய சிறு பெண்ணும், அவள் அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும், அவன்-அவன் இன்னமும் ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்போது, இந்தச் சிறு பெண்ணிடத்தில் பேசுமளவிற்கு ....... அவனுடையச் சிந்தனையானது ஒருவிதமான நிலையினை அடைந்துவிட்டது ....... அவன் - அவன் ...... ஆனால் அவனோ அவளிடத்தில் பேசிக்கொண்டிருந்ததாகவே எண்ணிக் கொண்டு, அவளிடத்தில், “இப்பொழுது தேனே, நீண்ட காலமல்ல, தகப்பனோ கிறிஸ்துமஸிற்கான இந்தப் பொம்மையை உனக்கு வாங்கப் போகிறேன். தகப்பனார் அந்தப் பொம்மையை உனக்கு வாக்களித்திருக்கிறேன். எனவே நான் - நான் - நான் அதை வாங்கப் போகிறேன்” என்றே சொல்லிக் கொண்டிருந்தான். 62முடிவாக கிறிஸ்துமஸ் வந்தடைந்தது. அதன் போக்கு எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஐஸ்வரியவான்கள் தங்களுடைய - தங்களுடைய பெரிய விருந்தினர் கூட்டங்களை உடையவர்களாயிருந்தனர்; மெழுகுவர்த்திகளோ எரிந்து கொண் டிருந்தன. சபைகளில் மகத்தான உயரிய பெருமிதமான ஆராதனை களும், இயேசுவானவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருத்தல் போன்றவை நடைபெற்றுக்கொண்டிருந்தன. (சபைகள் அவ்வாறே இருந்தன) அவைகள் எல்லா விதமான நடைமுறை ஒழுங்குகளி னூடாகவும், திருச்சபை ஆராதனைகளினூடாகவும், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப்பாடல் கொண்டாட்டம் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தி னூடாகவும் சென்று கொண்டிருந்தன. இவை எல்லாவற்றிற்கும் பின்னால், அங்கிருந்த அந்த தெருச்சந்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதையே அவர்கள் அறியாதிருந்தனர். இந்தச் சாதாரணமான நபர் அங்கே பின்னால் இருந்தான். அவன் தன்னையறியாமல் உணர்விழந்தவனானான். அவன் அந்தச் சிறு பெண் அந்தப் பொம்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று மிகுந்த ஆவலோடு விரும்பினான். ஏனென்றால் அவள் இந்தச் சிறு பொம்மைக்காக அவ்வளவாய் கெஞ்சியிருந்தாள். ஆகையால் அவன் வெளியே சென்று; அவளுக்கு ஒரு சிறு கந்தை சுற்றப்பட்ட கீறல் கொண்ட பொம்மையை, ஒரு சிறிய-ஒரு சிறியப் பொருளை, அநேகமாக கிட்டத்தட்ட முப்பது சென்டுகள் கொண்டதை விலைக்கு வாங்கினான்; அவன் வீதியின் ஓரத்தில் ஒரு சிறு அழுக்கான ஏதோ ஒன்றை வாங்கினான். அதுவோ உண்மையாகவே குளிரான இரவாயும், பனிச்சூறாவளிக் காற்றோ வீசிக்கொண்டும், அங்கே பனிப்பொழிவோ கடுமையாகவுமே இருந்தது. அது நியூயார்க்கின் கடற்கரை ஓரமாயிருந்தது. 63தெருக்கள் வழிந்தோடின ; ஜனங்களோ தங்களுடைய பெரிய முழுவதுமாய் மூடப்பட்ட கார்களில் பயணித்துக் கொண்டிருந் தனர் என்றே நான் நினைக்கிறேன். மதுபான விருந்துகள், மது அருந்துதல், கிறிஸ்துவினுடைய பிறப்பின் கொண்டாட்டம் மற்றும் இன்றிரவு நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்தக் காரியங்களைக் குறித்தும், அதைச் செய்வதும், சரியான முறையாயுள்ளது என்றே எண்ணிக் கொள்ள முயல்கின்றனர்; அப்படியேத் தங்களுடைய பழையத் துக்கங்களையும், மற்றக் காரியங்களையும் ஒரே மூச்சிற் குடித்து மறக்க முயற்சித்து, அதைச் செய்ய அதுவே வழி என்றும் எண்ணுகின்றனர். அவர்கள் எல்லோருமே .......... அன்றொரு நாள் கடையில் நின்றிருந்தபோது, ஒரு ஸ்திரீ எதைக் குறித்துப் பேசினாளென்றால் ......... இரண்டு பெண் பிள்ளைகள் சந்தித்து, அவர்கள் தங்களுடையத் தகப்பனாருக்காக என்ன வாங்கி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள விரும்பினர். அவர்களில் ஒருவள், ''நல்லது , அவர் ...'' என்றாள். அவளோ அவருக்கு ஒரு குறிப்பிட்ட ரகமான சிகரெட்டுகளைக் கொண்ட ஒரு பெட்டியை வாங்கி வைத்திருந்தாள். மற்றவளோ அவருக்கு ஐந்துப் புட்டி மதுபானமும், சீட்டு விளையாட்டு கட்டு அட்டையையும் வாங்கி வைத்திருப்பதாகக் கூறினாள். இப்பொழுது அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கான ஒரு நினைவுச்சின்ன வெகுமதியாய் அளிக்கப்படாதிருந்தால் நலமா யிருக்குமே! அந்த விதமாகத்தான் அது செல்கிறது. நீங்கள் பாருங்கள். அது வெறுமனே மினுக்கான ஒரு கூட்ட பெரிய பகட்டார வாரமாயிருக்கிறது. அது கிறிஸ்துமஸையே அதில் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. 64எனவே இந்தச் சாதாரண மனிதன், அவன் முற்றிலும் அலைந்து திரிந்ததை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். அவன் தன்னுடைய சிறு பெண் மரித்துப் போய்விட்டாள் என்பதைத் தன்னுடைய இருதயத்தில் அறிந்திருந்தான். ஆனாலும் அவன் சென்று, எப்படியோ அந்தப் பொம்மையை வாங்கினான். அப்பொழுது அவன், “நான் அப்படியே நடந்து செல்லத் துவங்குவேன், நான் அவளை எங்காவது கண்டுபிடிப்பேன். அவள் இங்கே இந்த வீதியினூடாக இருப்பாள், நான் அவளைக் கண்டறிவேன்” என்று எண்ணினான். எனவே அவன் நடக்கத் துவங்கினான். அவன் - அவனால் தன்னையே ஏமாற்றிக் கொள்ள முடியவில்லை, அவள் அங்கே முன்பிருந்த அந்தச் சிறு குடிலில், அந்தச் சிறிய , கந்தையான, அழுக்கான படுக்கையில் இருக்க வில்லை; ஆனால் அவளோ அடக்கம் பண்ணப்பட்டிருந்தாள். ஆகவே அவன் அறிந்திருந்தான். அவளை வீதியில் கண்டறிவேன் என்றே அவன் எண்ணிக்கொண்டான். எனவே அவன், “நான் தொடர்ந்து நடந்து செல்வேன்” என்றான். மற்றவர்களோ தங்களுடைய கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி கீதங்களைப் பாடிக்கொண்டே நடந்து கொண்டிருக்கையில், அவன் அந்தத் தெருச் சந்துகளி னூடாகச் சென்று கொண்டிருந்தான். இந்தச் சிறு அழுக்கானப் பொம்மையை எடுத்துக் கொண்டு தெருச் சந்தினூடாகவே சென்று கொண்டிருந்தான். தன்னுடையச் சிறு பெண்ணைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தன்னுடைய இருதயத்திற்கு மேலே , தன்னுடைய மேற்சட்டையில் அதை வைத்திருந்தான். 65முடிவாக ஒரு காவற்காரன் அவனைக் காண நேர்ந்தது. அந்தக் காவற்காரனும் சற்று குடித்தவனாகவேயிருந்தான். அவன் அந்தச் சந்திற்குள்ளாக ஓடி, அந்த வயோதிக மனிதனைப் பற்றிப் பிடித்து, அவனைத் திருப்பினான். அப்பொழுது அவன், “நீ இங்கே சுற்றித்திரிந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டான். அதற்கு இவனோ, ஐயா, நான் இந்தச் சிறு பொம்மையை என்னுடைய சிறு பெண்ணுக்கு எடுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்“ என்றான். அவன், “இது இருக்கட்டும், நீ எங்கே வசிக்கிறாய்?” என்று கேட்டான். இவனோ தான் எங்கே வசித்து வந்தான் என்பதை அவனிடம் கூறினான். அப்பொழுது அவன், “இருக்கட்டும், நீ அந்த இடத்திலிருந்துத் தாண்டி தூரமாய் சென்று கொண்டிருக்கிறாய். நீ குடித்திருக்கிறாய். வேறு வழியாய் திரும்பிப் போ'' என்றான். அதற்கு இவனோ, “ஐயா, நான்-நான் குடித்திருக்க வில்லை. நான் கிறிஸ்துமஸிற்காக ஒரு வெகுமதியை என் சிறு பெண்ணிற்கு அளிப்பதாக அவளுக்கு நான் வாக்களித்தேன்'' என்றான். மேலும் ”ஒரு சிறு பெண்ணிற்காக ஒரு பொருத்தமான வெகுமதி ஒரு சிறு பொம்மையாயுள்ளது“ என்றேக் கூறினான். அப்பொழுது அவனோ, “நான் அதைக் காணட்டும்” என்றான். எனவே அவன் ஒரு சிறிய , அழுக்கான, கந்தையைப் போன்றதான ஒரு பொம்மையை அவனுக்குக் காண்பித்தான். அவன் அதைத் தன்னுடைய ...... தன்னுடைய மார்போடு அந்தச் சிறு பொம்மையை அணைத்து வைத்துக் கொண்டிருந்தான்........ அப்பொழுது பாதி போதையில் இருந்த காவற்காரன்தாமே அவனை இடித்துத் தள்ளிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டான். அந்த வயோதிக மனிதனோ சந்தினூடாகவே செல்ல, பனியோ வேகமாகவே பொழிந்து கொண்டிருந்தது. 66நள்ளிரவு விருந்துகள் கலைந்தன. அடுத்த நாள் காலை யில் பனி குறைந்து போயிருந்தது. சூரியனோ உதயமாயிருந்தது. எனவே அவர்கள் ........ எல்லா ஜனங்களுமே தங்களுடைய பெரிய களிப்பூட்டும் விருந்துகளிலிருந்தும் ...... தங்கள் தலைகளுக்கு மேலிருந்து பனிக்கட்டி சாக்கு மூட்டைகள் ....... மட்டு மீறிய குடி போதையிலிருந்தும், கிறிஸ்துவினுடைய பிறப்பின் கொண்டாட்டத் திலிருந்தும் ..... வேண்டும். அவர்களில் அநேகருக்கு தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருந்த காரியங்களினால், நிகழ்ந்து கொண்டிருந்த எல்லாவற்றினாலும் தொண்டை கரகரப்பானதாகியிருந்தன. ஆனால் அவர்கள் அந்த வயோதிக மனிதனை சந்தின் வழியில் கண்டனர். அவர்கள் அவனைத் திருப்பிப் பார்த்தபோது, அவன் அந்தச் சிறு பொம்மையைத் தன்னுடைய மார்பருகே அணைத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வெகுமதியை அவளிடத்திற்குக் கொண்டு சென்றான் என்று நான் நினைக் கிறேன். அவன் அவளை இங்கு அல்ல ஒரு தேசத்திலே கண்டான். அவன் - அவன் - அவன் அந்த வெகுமதியைக் கொண்டு சென்றான். அது ஒரு பொருத்தமான வெகுமதியாயிருந்தது. (இரக்கங்காட்டுகிற தேவனே) அதேச் சமயத்தில் அது அவனுக்கு அவனுடைய மரணத்தையே கிரயமாக்கிற்று. அவன் இந்த உலகத்தில் அந்த வெகுமதியை அவளுக்கு அளித்திருக்கக்கூடிய வேறு வழி எதுவுமே கிடையாது. அவளோ அடக்கம் பண்ணப்பட்டிருந்தாள். ஆனால் அதை அளிக்க முடிந்த ஒரே வழி அந்த விதமாய் செல்வதேயாகும். அந்தச் சிறிய பொம்மை, சிறிய அழுக்கான முகம் படைத்தப் பொம்மை மிக அதிகமாக பொருள்பட்டிருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அது ....... அவன் அதற்கு என்ன செய்தான்? அது அவன் பண்ணியிருந்த ஒரு வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியது. ஜனங்கள் அதைக் குறித்து என்ன நினைத்தனர் என்பது முக்கியமல்ல. ஒரு சிறிய, அழுக்கான பொம்மையின் மேல் அவனுடையக் கரங்கள் இருந்தன. ஆனால் அதுவோ - அது அவனுடைய சிறு பெண்ணுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினது. 67சில நேரங்களில் அவர்கள் பாடுவதைப் போன்றும், இசைப்பதைப் போன்றுமே சுவிசேஷத்தின் பேரில் நோக்குகிறார்கள். தேவன் அதைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அதை விரும்ப வில்லை, ஆனால் அதுவோ அவர் தம்முடைய குமாரனைத் தந்தருள்வார் என்ற ஒரு வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினது. உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அவர்கள் அவரையும்கூட வீதியின் மேல் ஒரு நாடோடியைப் போல மரிக்கும்படி விட்டு விட்டனர். அது முற்றிலும் உண்மை . அவர்கள் வீதியின் மேல் ஒரு நாடோடியைப் போன்றே அவரை மரிக்கும்படிவிட்டனர். இன்றைக்கும் அவர்கள் அவரை வீதியில் உள்ள ஒரு நாடோடியைப் போன்றே நடத்துகின்றனர். ஆனால் அவர் செய்யப்பட வேண்டு மென்றிருந்ததை அவர் நிறைவேற்றினார். அவர் உலகத்திற்கு தேவன் வாக்களித்த வெகுமதியாயிருந்தார். இன்றிரவு நான் அவரை என் இருதயத்திற்குள் என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வேனாக. நான் என்னுடைய மரணத்தின் சந்திப்பிலும் அல்லது அதைப் போன்று அது என்னவாயிருந்தாலும் நடந்து செல்வேனாக. நான் என்னுடைய ஜீவியத்தை அவருக்கென்று வாக்களித்தேன். நான் அதை அவரண்டை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக் கிறேன். நான் என்னவாய் செல்ல வேண்டியிருந்தாலும், நான் மரணத்தினூடாகச் செல்ல வேண்டியிருந்தாலும், நான் சுடப்பட வேண்டியிருந்தாலும் கவலைப்படமாட்டேன்; என்ன சம்பவித்தாலும், நான் ஏளனஞ்செய்யப்பட வேண்டியிருந்தாலும், “பித்துப்பிடித்தவன்” என்று அழைக்கப்பட வேண்டியிருந்தாலும், ஒவ்வொரு காரியத்தி லிருந்தும், மற்றக் கிறிஸ்தவ சபைகளிலிருந்தும் விலக்கி வைக்கப்பட வேண்டியிருந்தாலும் கவலைப்படவேமாட்டேன். எனக்கோ ........ அது என்னுடைய இருதயத்தில் நான் வைத்திருக்கும் ஒரு தேவனுடைய வரமாயிருக்கிறது. அவர் அதை அளித்தார். நான் அதை அவரண்டைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். நாம் அப்படியே சற்று நேரம் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. 68நான் பொருத்தமான வரங்களில் பேரில் பேசுகிறேன். அது பொருத்தமான வரமாயிருந்தது. ஏனென்றால் அந்தச் சிறு பெண்... அவள் ஒரு சிறு பெண்ணாயிருந்தாள். ஓர் எளிமையான தாயாய் (இருந்திருக்க வேண்டியவள்) பொருத்தமான வெகுமதியாய் அந்தச் சிறு பொம்மையிருந்தது. நாம் இருந்த நிலையிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி தேவனும், சிருஷ்டிகருமானவர் தம்முடைய சிருஷ்டிக்கு அளிக்க முடிந்த ஒரு பொருத்தமான வெகுமதியே ஓர் இரட்சகராகும். இன்றிரவு நாம் இப்பொழுது கிறிஸ்துமஸை அணுகிக்கொண்டிருக்கையில் நான் வியப்புறுகிறேன், நாம் யாரோ ஒருவருடைய வானொலிச் செய்தியைக் கேட்டாலொழிய, நாம் கேட்பதே இப்பொழுதும் கிறிஸ்துமஸுக்குமிடையேயான கடைசி செய்தியாகும் என்றே நான் நினைக்கிறேன். கிறிஸ்துமஸின் மேல் விசுவாசங்கொண்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுதலிலேயே நித்திய ஜீவன் உண்டு என்று தேவன் நமக்கு வாக்குப்பண்ணின வெகுமதியை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோமா என்றே இன்றிரவு நான் வியப்புறுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், நீங்கள் தேவனுடைய மெய்யான, உண்மையான கிறிஸ்துமஸ் வெகுமதியை ஏற்றுக் கொள்ள விரும்பினால், உங்களுடையக் கரத்தை நீங்கள் உயர்த்துவீர்களா? நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், எனக்குஎனக்குத் தெரியாது, நான் நான் சில நேரங்களில் அதை விசுவாசித்திருக்கிறேன். நான் என்னக் காரியங்களைச் செய்கிறேன் என்று நான் கவனித்திருக்கிறேன். நான் ஒரு விதமான சிறு சந்தேகத்தில் இருக்கிறேன்” என்று கூறுங்கள். நண்பர்களே, இனி ஒருபோதும் அதைச் சந்தேகிக்காதீர்கள். பாருங்கள், இப்பொழுது சந்தேகப்படுவதோ மிகவும் கடந்ததாயுள்ளது, நாம் அதைக் குறித்து நிச்சயமாகவே உண்மையாயிருப்போமாக, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள், எனக்குத் தேவை... இயேசு கிறிஸ்து உலகத்திற்கு தேவனுடைய வெகுமதியாயிருக்கிறார். எனக்குஎனக்கு எனக்கு இது ஒரு மெய்யானக் கிறிஸ்துமஸாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியை என்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்கிறேன். அது என்னை வாழ்க்கையின் புயல்கள் எல்லாவற்றினூடாகவும் தொட்டிலிட்டு ஆதரவளித்துப் பேணமுடியும். அப்பொழுது என்றோ ஒரு நாள் என்னால் அவருடைய பிரசன்னத்தில் இந்த நித்திய ஜீவனின் வெகுமதியோடு வரமுடியும். அவர் அந்த அடிப்படையின் பேரில் என்னை ஏற்றுக்கொள்வார். அவர் அதைச் செய்ய அந்த ஒரே வழி மாத்திரமே உண்டு” என்று கூறுங்கள். 69சரி, இன்றிரவு நீங்கள் அந்த உண்மையான வெகுமதி யைப் பெற்றுக் கொண்டீர்களா? சரியான விதமான மனப்பான்மை யிலா? பிதாவே, “நீர் எங்கேதான் சென்றாலும் நான் உம்மைப் பின்தொடர்வேன். நீர், 'செய்' என்று என்னவெல்லாம் கூறினாலும் நான் அதைச் செய்வேன். எனக்காக உம்முடைய வார்த்தையானது 'செய்' என்று என்னவெல்லாம் கூறுகிறதோ, நான் அதைச் செய்வேன். ஆம், ஐயா, ஒவ்வொருவரும் என்ன கூறுகிறார்கள் என்பதற்கு நான் கவலைப்படமாட்டேன். நான் அதைச் செய்யப் போகிறேன், ஏனென்றால் எனக்கு உம்முடைய வெகுமதி வேண்டும்; அது ஜீவனாயிருக்கிறது, கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார்.” உங்களால் முழு வார்த்தையையும் விசுவாசிக்க முடியாமல், “எனக்குத் தெரியவில்லை , நான்-நான் அதை ....... இதை விசுவாசிக்கிறேன், நான் அதை விசுவாசிக்கிறேன். ஆனால் என்னால் இதற்குச் செல்ல முடியவில்லை. என்னால் அதற்குச் செல்ல முடியவில்லை” என்று கூறுவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் விட்டுச் சென்ற எழுபது பேரைப் போன்றிருக்கிறீர்கள். அவர்களால் முழு வார்த்தையையும், அவருடையத் தெய்வீகத்தன்மை யின் பரிபூரணத்தில் கிறிஸ்துவையும், அவருடைய ஊழியத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் உங்களுக்காகச் செய்தது போன்றே நீங்களும் மரிக்கும்படி ஆயத்தமாயிருங்கள். அப்படியானால் உங்களுடையத் தலை வணங்கியிருப்ப தோடு, நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “எனக்காக ஜெபிப்பீரா?” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறுபெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப் பாராக. ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம், நான் உங்களுடைய கரத்தைக் காண்கிறேன். நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உலகத்திற்கு அனுப்பின கிறிஸ்துவாகிய இந்தச் சிறு வெகுமதி; அது ....... அடையாளங் காட்டப்பட்டது. ....... வானசாஸ்திரிகள் அதை அடையாளங் காட்டினர், அவருடைய சொந்த ஜீவியமே அதை அடையாளங் காட்டினது, அவருடைய மரணம் அதை அடையாளங்காட்டினது. அவருடைய உயிர்த்தெழுதல் அதை அடையாளங்காட்டினது. உங்களுடைய ஏற்றுக்கொள்ளுதல் அடையாளங்காட்டினது. நீங்கள் அவருடையவர்களாயிருக்கிறீர்கள் என்றும், அவர் உங்களுடையவராயிருக்கிறார் என்றும், அவர்தாமே உங்களோடு அடையாளங் காட்டுகிறார். நீங்கள் உண்மையாகவே ..... இல்லையென்றால் ...... பாருங்கள், இந்தக் கிறிஸ்துமஸ் சமயத்தில் உங்களுக்குள் கிரியைச் செய்யும் தேவனுடைய ஆவியின் விளைவு, அது இப்பொழுதே உங்களண்டை வருவதாக. 70பரலோகப் பிதாவே, நாங்கள் வீதியிலே அந்த நாடோடியைப் போன்றே தடுமாறுகையில், அவனுக்காக எவரும் பிரயோஜனமாக இருக்கவில்லை. உலகமோ தங்களுடைய முட்டாள்தனமான முன்னேற்பாட்டு செயல்களில் சென்றுவிட்டது. கர்த்தாவே, அவர்கள் இன்றிரவும் அவ்வண்ணமே இருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் நாங்கள் அந்த நாடோடியைப் போன்றே உணருகிறோம். ஆனால் நாங்கள் ஒரு வெகுமதியை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆகையால் பிதாவே, நீர் எங்களுக்கு ஒரு வெகுமதியை, ஒரு ஜீவனை இந்த மரித்துக் கொண்டிருக்கிற உலகத்திற்கென உருவாக்கும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவன்தாமே தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளி, இறங்கி வந்து ஒரு மனிதனாக மாறின அந்தத் தேவனுடைய வெகுமதி தங்களுக்கு வேண்டும் என்று இங்கு அனேகர் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கின்றனர். அவர்கள் ....... கூட இல்லாத ......... அளவிற்கு அவர் அவ்வளவு கீழாகத் தாழ இறங்கினார்... அவர் ...... அவர்கள் அவர் பிறப்பதற்கு ஒரு படுக்கைக் கூட வைத்திருக்காத அளவிற்கு ....... அவர் அவ்வளவு கீழாய், அவ்வளவு தாழ்மையாய் வந்தார். ஒரு - ஒரு - ஒரு பசு....... அல்லது ஒரு குதிரை அல்லது ஏதோ ஒன்று அதனுடைய முன்னணையைத் தரவேண்டியதாயிருந்தது. (ஒரு மிருகம்) ஒரு பக்கமாக அடி யெடுத்து வைத்து ஒதுங்கியது. மானிட வர்க்கங்கள் அவ்வண்ண மான நிலையினை அடைந்து அங்கிருந்தன. அவர் - அவர் அனேக ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேசியினுடைய மகன் ஸ்தாபித்த சிறு பட்டணமான பெத்லகேமில் உள்ள குன்றின் பக்கத்தில் உள்ள ஒரு சிறியப் பழைய குகையானத் தொழுவத்தில் உள்ள ஒரு முன்னணைக்குள் இறங்கி வந்தார். இப்பொழுதும் கர்த்தாவே, ஓர் இரவு, ஒரு குளிரான இரவு, “ரபீ, நாங்கள் இன்றிரவு உம்மோடு வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்'' என்று அவரிடத்தில் கூறப்பட்டது என்பதை நாங்கள் கண்டறிகிறோம். அப்பொழுது அவர், “இப்பொழுதோ, பறவைகளுக்கு கூடுகள் உண்டு, நரிகளுக்குக் குகைகள் உண்டு, ஆனால் எனக்கோ - எனக்கோ - எனக்கோ என்னுடையத் தலையைச் சாய்க்கக் கூட ...... இடமில்லை ” என்றாரே. அந்தவிதமாகத்தான் அவர்கள் அவரை வீதியில் அந்த நாடோடியைப் போல மரிக்கும்படிவிட்டனர். 71பரலோகப்பிதாவே, கிறிஸ்தவனால், இன்றைக்கு ஜனங்களால் அதுவே - அதுவே அந்த மகத்தான வெகுமதி என்பதைக் காணமுடியுமா? இன்றிரவு அநேகர் இங்கே பன்னிரண் டிற்கும் மேற்பட்டோர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பினர் என்றே தங்களுடையக் கரங்களை உயர்த்தினர் என்று நான் யூகிக்கிறேன். இவர்கள் அங்கே வானசாஸ்திரிகள் இருந்ததைப் போன்றிருக்கலாம், சபையில் உள்ள மற்றவர்கள் என்ன சம்பவிக்கிறது என்பதைக்கூட காணாதிருக்கலாம். இந்த நட்சத்திரம், இந்தத் தெய்வத் திறனுடைய ஒளி இரண்டு வருடங் களாக வான ஆராய்ச்சி நிலையங்களைக் கடந்து சென்றது. அப்பொழுது ஜனங்கள் நேரத்தையும்கூட (நான்கு ஜாமங்களாக) கணக்கிட்டு வந்தனர். அவர்கள் நட்சத்திரங்களைக் கொண்டே நேரத்தைக் கணக்கிட்டனர். எவருமே, எந்த சரித்திரக்காரனுமே அதைக் குறித்து எழுதவில்லை . எவருமே அதைக் குறித்து அறிந்திருக்கவில்லை. அதே சமயத்தில் அது அங்கிருந்தது. இந்த வான சாஸ்திரிகள் தங்களுடையப் பொருத்தமான வெகுமதிகளோடு அதனண்டைக்குச் சரியாக வழிநடத்தப்பட்டனர். அந்த அதே ஒளியானது இப்பொழுது இன்றிரவு இங்கே அமர்ந்துள்ள ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் வருவதாக. உணர்ச்சிவசப்படுதல் இல்லா திருப்பதாக. இது, அது என்றில்லாதிருப்பதாக. வானசாஸ்திரி களுக்கிருந்ததைப் போன்றே மற்ற எவருமே அதை அறிந்து கொள்ளாமலிருக்கலாம். ஆனால் இந்த மனிதர்களுக்குள்ளாக, ஸ்திரீகளுக்குள்ளாக, பையன்கள் மற்றும் பெண்களுக்குள்ளாக இன்றிரவே இருதயங்களில் ஏதோக் காரியம் அவ்வளவாய் நிலைகொள்ளப்படுவதாக. அதாவது தேவனுடைய வெகுமதி அவர்களுடைய ஜீவியத்தை அபிஷேகிப்பதாக. இன்றிரவு முதற் கொண்டே அவர்கள் மாற்றப்படுவார்களாக. அவர்கள் இனி ஒருபோதும் அவர்கள் வழக்கமாயிருந்ததைப் போன்றில்லாதிருப் பார்களாக. அவர்கள் வானசாஸ்திரிகளைப்போல, “தேவனால் எச்சரிக்கப்பட்டு, அவர்கள் வேறு வழியாய்த் திரும்பிச் சென்றது போல” உலகத்தின் வேஷங்களுக்கு (ஏரோது இராஜாவினுடைய அரண்மனைக்கு) திரும்பிச் செல்லாமல் வேறு வழிகளில் செல்வார் களாக. இதை அருளும், கர்த்தாவே. 72இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு ஞானமுள்ள மனிதனுக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும் இன்றிரவே நான் ஜெபிக்கிறேன் ...... புருஷனும், ஸ்திரீயும் போதிய ஞானமுள்ளவர் களாய் இன்றிரவே உலகத்தின் காரியங்களிலிருந்து விலகி வேறு வழியில் சென்று, இந்நாளுக்கேற்றபடி இனி ஒருபோதும் திரும்பிச் செல்லாதிருப்பார்களாக. இந்த-இந்தப் பொழுதும் இரவும் கடந்து சென்ற பிறகு, அவர்கள் இனி ஒருபோதும் உலகத்தின் காரியங் களுக்குத் திரும்பாதிருப்பார்களாக. இந்தச் சிறிய தெய்வத் திறனுடைய சத்தமே அவர்கள் தங்களுடையக் கரத்தினை உயர்த்தி, “ஆம், எனக்குத் தேவனுடைய வெகுமதி வேண்டும்” என்று கூற காரணமாயிருந்தது ....... அவர்கள் தங்களுடையக் கரத்தை உயர்த்தக் காரணமாயிருந்த அதேக் காரியம், இன்றிரவு அவர்களுக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியின் மூலமாக அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலோடு அவர்களை அடையாளங்காட்டுவதாக. அவர்கள் வேறுவழியில் திரும்பிச் செல்வார்களாக. கர்த்தாவே, இன்றிரவு இங்குள்ள இந்த ஸ்திரீகளுக்கு உலகத்தோடு இணைந்துச் செயலாற்றுவதிலிருந்து விலகியிருப் பதற்கு இது அப்படிப்பட்ட ஒரு கடினமான நேரமாயிருக்கிறது; அவர்களுடையத் தலைமுடியை வளரவிட்டும், பெண்மணியைப்போல் உடை உடுத்தட்டும், இந்த மாதர் முக ஒப்பனை மற்றும் இழிபொருள், இந்தச் செயற்கையாகச் செய்யப்பட்டவை களையப்படுவதாக. அது - அது அவர்கள் ஆரோக்கியமாயிருக்கவில்லை என்றும், அவர்கள் ....... அங்கே - அங்கே ஏதோக் காரியம் தவறாயிருக்கிறது என்றே ஒருவிதமாக அவர்களை அடையாளங்காட்டுகிறது ..... அதையேக் காண்பிக்கிறது. இன்றிரவு இந்தச் சிறிய தெய்வத் திறனுடைய ஒளி, கர்த்தாவே, அது அவர்கள் தங்களுடையக் கரத்தையுயர்த்தக் காரணமாயிருந்தது. அவர்கள், “கர்த்தாவே, நான் உலகத்தின் காரியங்களிலிருந்து இன்றிரவு வேறு வழியாய்த் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறேன்'' என்று கூறுவார்களாக. 73இந்த மனிதர்கள் தங்களுடைய மனைவிகளிடத்தில் பேசி, அவர்கள் செய்கிறக் காரியங்களிலிருந்து அவர்களை வேறு வழியில் திருப்புவதற்குக் காரணமான உண்மையான ஒரு காரியத்தை உடையவர்களாயில்லாமல் இருந்து வந்தனர். கர்த்தாவே, எங்களுடைய இருதயத்தின் மேல் ஊடுருவிச் செல்கிற தேவனுடைய ஒளியாகிய வினோதமான சிறியச் செய்தியினைக் கொண்டு தேவனால் எச்சரிக்கப்பட்டு, நாங்கள் யாவருமாய் சேர்ந்து இன்றிரவே அப்படியே வேறு வழியாய்த் திரும்பிச் செல்வோமாக. இன்றிரவே நாங்கள் வேறு வழியாய்த் திரும்பிச்சென்று, எங்களுடைய மீதமுள்ள நாட்களில் உமக்காக ஜீவித்து, நாங்கள் பயணித்துக் கொண்டு வருகிற வழியைக் காட்டிலும் மேலான வேறொரு வழியினால் உம்மோடு வீட்டிற்குச் செல்வோமாக. கர்த்தாவே, இதை அருளும். எங்களை மேலானக் கிறிஸ்தவர் களாக, பிதாவே, உம்மேல் விசுவாசங்கொண்டு, உம்மை ஏற்றுக் கொண்டவர்களாய் இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்த வனையும் மேலான கிறிஸ்தவனாக உருவாக்கும். அவர்கள் ஒரு கிறிஸ்தவ ஜீவியம் ஜீவிக்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வேறுவழியாய்த் திரும்பிச் செல்வார்களாக. அவர்கள் அந்த வெகுமதியை பெற்றுக் கொள்வார்களாக. ஓ, தேவனே, அது- அது ஒரு-அது ஒரு இழிவாகக் கருதப்பட்ட வழியாயிருக்கிறது. ஸ்திரீகள் “பண்டைய நாகரீகங் கொண்டவர்கள்' என்றழைக்கப்படுவர். அவர்கள் எல்லாவித மாகவும் அழைக்கப்படுவர். புருஷர், ”பித்துப் பிடித்தவர்கள்“ என்றழைக்கப்படுவர். ஆனாலும் கர்த்தாவே, நாங்கள் - நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம். 74பரிசுத்த ஆவியானவரே, இப்பொழுதே எங்களை வேறு வழியில் திருப்பும், கர்த்தாவே, என்னை வேறு வழியில் திருப்பும். நான்-நான்-நான் உம்மிடத்திலிருந்துத் தூரமாய் விலகிச் செல்ல என்னை வழிநடத்தும் எந்த வழியிலும் செல்லவிரும்பவில்லை. கர்த்தாவே, நான் செல்ல வேண்டும் என்று நீர் எனக்கு வைத்திருக்கிற வழியிலேயே நான் செல்ல விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் மரித்து விடவில்லை, நீர் ஜீவித்துக் கொண். டிருக்கிறீர் என்று புவியின் மேல் உம்மை அடையாளங்காட்டும் படியாய் அவ்வளவு பரிபூரணமாய் என் இருதயத்தின் வெகுமதி இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நீர் மரித்த தேவனாயிராமல் ஜீவனுள்ள தேவனா யிருக்கிறீர். மரித்துப்போனவன் முழுவதும் ஈக்களால் மூடப்பட்டு, முட்டையிடும் ஈக்களால் நுண்கிருமிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இன்னும் அதிகமான முட்டையிடும் ஈக்கள் உற்பத்தியாக்கிவிடப் படுகின்றன; அதுபோன்றே மனிதன் முதல்முறையாகத் தன்னுடைய மதுவை அருந்துவதும், தன்னுடைய முதல் சிகரெட்டைப் புகைப்பதும், தன்னுடைய முதல் பொய்யைக் கூறுவதும், முதன் முறையாக தன்னுடைய மனைவியின் பேரில் வெளியேச் செல்வது அல்லது கணவனின் பேரில் மனைவி வெளியேச் செல்லுதல் அல்லது தவறான காரியங்களைச் செய்வதென்பது அப்படியே ஒரு முட்டை யிடும் ஈயானது அவர்களை கடித்து ஊடுருவிச்சென்றது போன்றே யுள்ளது. அது ....... அவைகள் - அவைகள் ஒன்று திரண்டு ........ பூச்சியின் முட்டைகளிலும், கழிவுப்பொருட்களுக்குள்ளும் செல்கிறது ......... ஏனென்றால் அது உட்புறத்தில் மரித்துப்போன ஆத்துமாவின் மேல் உள்ளது. பொல்லாத ஆவிகள் புறப்பட்டுச் செல்லத் துவங்கு கின்றன ........ அது..... ஒரு பொல்லாத ஆவியே அதைப்போன்ற ஏதோ ஒன்றை அவன் செய்ய காரணமாயிருக்கிறது; மற்றொன்று வந்து, அவர்கள் இதைச் செய்தக் காரணத்தினால் அவனை வேறேதோ ஒன்றைச் செய்யும்படி அழைக்கிறது. 75தேவனே, அவர்கள் வேறு வழியாய்த் திரும்பி, ஜீவனண்டைக்கு வருவார்களாக. கர்த்தாவே, தேவனுடைய தூதர்கள் நித்திய ஜீவனின் வெகுமதிகளோடு இறங்கிவர, அவர்கள் எழுந்து, ஜெயத்தின் மேல் ஜெயத்தைப் பெற்று புறப்பட்டுச் செல்வார்களாக. பிதாவே, இதை அருளும். இயேசுவானவர் மீண்டும் பூமிக்குத் திரும்பி வருகிறார் என்றும், காலமானது சமீபித்திருக்கிறது என்றும் தேவனால் எச்சரிக்கப்பட்டு, உலகத்தின் கவலைகளிலிருந்தும், உலகத்தின் காரியங்களிலிருந்தும் இன்றிரவே நாங்கள் வேறுவழியாய்த் திரும்பிச் செல்வோமாக. நாங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிற அந்த நித்திய ஜீவனை மகத்தான பரிசுத்த ஆவியானவர் இன்றிரவே எங்களுக்குத் தந்தருள்வாராக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் அவைகளை இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறபடியால், நீர் இந்த ஆசீர்வாதங்களை எங்களுக்கு அருள் வேண்டும் என்றே நாங்கள் - நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடையத் தலைகள் வணங்கியிருப்பதோடு: 76வானசாஸ்திரிகள் நீண்ட காலத்திற்கு முன்னர் அதனண்டை வந்தனர் ......... அந்த ஒளியினைப் பின் தொடர்ந்தனர் ........ அவர்கள் அந்தப் பரிபூரண ஒளியினைக் கண்டடைந்தனர். இன்றிரவு நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தும்படிச் செய்த அந்தச் சிறிய ஒளி இல்லையென்றால் நீங்கள் ........ அறியாமலும் கூட ....... இருந்திருக்கலாம். அது உங்களைத் தொட்டது. ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்களுடையக் கரத்தை உயர்த்தினது கூட இல்லை. அந்த ஒளியானது உங்களைச் சரியாக அந்தப் பரிபூரண ஒளியினிடத்திற்கு வழிநடத்திச் செல்வதாக. நாம் யாவரும் ஒரு சிறிய அர்ப்பணிப்பின் ஆராதனைக்காக அப்படியே எழும்பி நிற்போமாக. இன்றிரவு இங்குள்ள நம்முடைய சிறிய இருதயத்தை கிறிஸ்துவிற்கான ஒரு வாசஸ்தலமாக நாம் ஆக்குவோமாக. இன்றிரவு நாடோடியைக் குறித்த என்னுடைய வினோதனமான சிறுகதை நினைவிருக்கட்டும். இன்றிரவு உண்மையாகவே இயேசு கிறிஸ்து வீதியில் அந்த நாடோடியைப் போன்றே இருக்கிறார். அது உண்மை , அவர் - அவர் வீதியில் ஒரு நாடோடியைப் போலிருந்தார். ஓ, ஆம், நாமோ, “நாம் அவரை சேவிக்கிறோமே” என்று கூறலாம். நிச்சயமாக. மினுக்கான அற்பப்பகட்டு மற்றும் மயக்கும் மாய வசீகரம் யாவுமே, அது அவராயிருப்பதில்லை . அது அவராயிருக்க வில்லை. அவர் ஒரு பொம்மையை அல்ல, ஆனால் ஜீவனை, இந்த வெகுமதியை உங்களுக்குக் கொண்டுவரும்படி மரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் அதை உங்களுக்குக் கொண்டு வரும்படியாக மரிக்க வேண்டியதாயிருந்தது. அந்த ஒரே வழியில் மட்டுமே அவரால் உங்களுக்குக் கொண்டுவர முடிந்தது. அவர் உங்களண்டைக் கொண்டுவர அவர் இருந்தவிதமாக இருந்து, ஒரு பரிபூரண மனிதனாயிருக்க, இங்கே அப்படியே வரமுடியவில்லை . அவரால் அதை அந்த வழியில் செய்யமுடியவில்லை . அவர் அதைச் செய்ய, தேவனுடைய வெகுமதியை உங்களண்டைக்குக் கொண்டுவர மரிக்க வேண்டியதாயிருந்தது. அந்த நாடோடியானவன் தன்னுடையப் பெண்ணுக்கு அந்தச் சிறிய பொம்மையைக் கொண்டு செல்ல மரிக்க வேண்டியதாயிருந்தது போலவே, கிறிஸ்துவும் தேவனை உங்கண்டைக்குக் கொண்டுவர மரிக்க வேண்டியதா யிருந்தது. நாம் அதை இன்றிரவே ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். நம்முடையத் தலைகள் வணங்கியிருப்பதோடு ........... நான் நினைக்கிறேன் ....... நாம் நம்முடையக் கரங்களைத் தேவனண்டைக்கு அப்படியே உயர்த்தி, நம்முடைய ஜீவியங்களைப் புதியதாக இன்றிரவு இங்கேயே அர்ப்பணிப்போமாக. 77ஓ, கிருபையுள்ள தேவனே, எங்களுக்கு - எங்களுக்கு உம்முடைய வெகுமதியே வேண்டும். கர்த்தாவே, நான் - நான் இந்தக் கிறிஸ்துமஸ் சமயத்தில் இங்கே இருந்து, நான் தெளிவாக உணர்ந்து, பூமியின் மேல் நோக்கிப் பார்க்கும்போது மினுக்கான, மாயையான மயக்கும் கவர்ச்சியின் நாளையே காண்கிறேன். வேதம் கூறியுள்ளதுபோன்றே நீர் இந்த லவோதிக்கேயாவின் காலத்தில் சபைக்குப் புறம்பேயிருப்பதையும் ....... என்னால் - என்னால் அப்படியே ......... அதே கண்ணுக்கெட்டியத் தொலைவில் காண முடிகிறது. நீர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர், உம்முடைய சொந்த சபைக்கும், உம்முடைய சொந்த ஜனத்திற்கும் ஒரு நாடோடியைப் போன்றிருக்கிறீர். நீர்-நீர் -நீர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர். மறுக்கப்பட்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாயிருந்துக் கொண்டிருக்கிற ஒரு-ஒரு நிலையற்ற நாடோடியாய், நீர் உம்முடைய சொந்தச் சபையில் மறுக்கப்பட்டிருக்கிறீர். அவர்கள் உம்மை விரும்புகிற தில்லை. கர்த்தாவே, அவர்கள் உம்மை வீதியிலே அந்த நாடோடி யைப் போன்று விட்டுவிட்டனர். தேவனே, நீர்-நீர்-நீர் எங்களுக்குத் தேவனுடைய வெகுமதியைக் கொண்டுவரும்படியாக, நீர் எப்படியோ ஒரு வகையில் மரிக்க வேண்டியவராகவே சென்றீர். கர்த்தாவே, நாங்கள் அதைத் தாழ்மையாய் ஏற்றுக்கொள்கிறோம். நீர் எங்களுடைய இருதயங்களையும், ஜீவியங்களையும் நிரப்ப வேண்டு மென்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு முதற்கொண்டே எங்களை வேறு பக்கமாகத் திருப்புவீராக. நாங்கள் எங்களையே உமக்கு அர்ப்பணிக்கையில், நாங்கள் முற்றிலும் உம்முடையவர்களாக இருப்போமாக. கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும், நான் செய்திருக்கிற ஜீவியத்தின் தவறுகள் அநேகமாயிருக்கின்றன. அன்புள்ள தேவனே, நான் - நான் இங்கே சுவிசேஷம் பிரசங்கிக்கட் பட்டிருக்கிற இந்தப் புனிதமான இடத்தில் நிற்கையில், அவர்கள் மேல் பிரகாசித்த அந்த மகத்தான ஒரு-ஒரு ஒளியிலும்கூட நான் உம்மை இங்கே கண்டிருக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் இதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் இந்தக் கிறிஸ்துமஸ் ஸிற்காக உலகம் செய்ய விரும்புவது போன்றல்ல, அல்லது புதிய பக்கங்களைத் திருப்பும்படியாக ....... அல்ல, என்னையே நான் அர்ப்பணிக்கிறேன். கர்த்தாவே, நான் - நான் உம்முடைய குமாரனை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். கர்த்தாவே, நான்-நான் உம்முடைய வெகுமதியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் கிறிஸ்துவினூடாக நித்திய ஜீவனாகிய வெகுமதி யை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் உண்மையாகவே, கர்த்தாவே, அவருக்கு மற்றவர்களை ஆதாயம் பண்ணும்படி முயற்சிக்க எனக்காக கிறிஸ்துவின் வெகுமதியை ஏற்றுக்கொள் கிறேன். ஒவ்வொருவரோடும் செல்லும். 78சாதாரணமான இல்லாளை அவ்வளவு இனிமையாயும், தாழ்மையாயும், அதாவது அவள் உம்மண்டை மற்றவர்களை வழி நடத்தக்கூடியவளாயிருக்கும்படியாக்கும். வெகுமதியாக நீர் அவளுக்கு அளிக்கிற அந்தச் சாதாரணப் பெண்மணியைப் போன்ற அந்தப் பெண்மையினால் அண்டை வீட்டார்கள் அவளைக் கண்டு, அவளைப் போன்றிருக்க வேண்டும் என்று விரும்புமளவிற்கு அவள் அந்த அளவிற்குப் பெண்மணியைப் போன்றிருப்பாளாக. - புருஷனோ, கடையில் பணிபுரிபவனோ, அவன் யாரா யிருந்தாலும், கர்த்தாவே, அவனுக்குக் கிறிஸ்துவைப் போன்ற ஒரு தாழ்மையான ஜீவியத்தை உருவாக்கி, அதை மற்றவர்கள் காணும்படிச் செய்யும். பிதாவே, அங்கே அந்த ஜனங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையே நாங்கள் அடயோம். ஆனால் நாங்கள் ஒருபோதும் உயரிய பண்டையப் பெரும்பாதையை விட்டுச் செல்ல விரும்புகிறதேயில்லை. நாங்கள் பின்னோக்கி சாய்ந்தோ, முன்னோக்கி சாய்ந்தோ, எங்காவது ஓர் ஆத்துமாவை ஆதாயப்படுத்தும்படியான வழியினைச் சென்றடைவோமாக கர்த்தாவே, அதை எங்களுடைய வாய்ப்பெல்லைக்குள்ளாகவே ஏற்படுத்தும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நாங்கள் எங்களைத்தாமே உம்மண்டை அர்ப்பணிக்கும்போது, ஜனங்கள் ஜீவிக்க விரும்பக் காரணமாயிருக்கும்படியான அப்படிப்பட்ட ஒரு ஜீவியத்தையே எங்களுக்குத் தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். இப்பொழுது நீங்கள் மீண்டும் உங்களுடையத் தலைகளை வணங்குவீர்களேயானால், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்தினைக்கூற விரும்புகிறேன். 79முந்தினபேறுமானவரும், ஒரே ஒருவராயிருப்பவரும், ஆதி முதலாயிருப்பவரும், ஒரே ஒருவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவே உங்களுடைய இருதயத்தில் இன்றிரவு புதிதான மகத்தான கிறிஸ்துமஸ் அன்பளிப்பாய் இருப்பாராக. பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்திற்கு வந்து, உங்களுக்குப் பணிவிடைக் கான வரங்களையும், தேவனிடத்திலிருந்துக் காரியங்களையும், நீங்கள் ஒரு மேலான ஜீவியம் ஜீவிக்கும்படியான ஒரு வெகுமதியை ....... உங்களுக்குக் கொண்டு வருவாராக. அதைத்தான் நான் விரும்புகிறேன். நான் எல்லா சுகமளிக்கும் வரங்களையும், தீர்க்க தரிசனங்களின் வரங்களையும், மற்றெல்லா வரங்களையும் உடையவனாயிருப்பதைக் காட்டிலும் இனிமையாயும், வெற்றிகர மாயும் ஜீவிக்கும்படியாக எனக்குள்ளே கிறிஸ்துவின் ஜீவனை உடையவனாயிருப்பதையே நான் விரும்புவேன்; எனக்கு இயேசுவைக் கொடுங்கள். அந்த ஜீவியத்தையே நான் ஜீவிக்கட்டும். அந்த ஜீவியத்தையே நான் ஜீவிக்க விரும்புகிறேன். நான் மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியாகவே ஜீவிக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய-அதுவே கிறிஸ்துமஸில் என்னுடைய வாஞ்சையாயுள்ளது. அதுவே உங்களுடைய வாஞ்சை யாயிருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். தேவன் நமக்கு அவருடைய வாஞ்சையைத் தந்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, நாம் போதகரிடத்திலிருந்து ஒரு சில வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு கலைந்துச் செல்வோமாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் புதன்கிழமை இரவு உங்களைக் காண்போம். அந்த நேரம் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக…